பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மொழிப் போராட்டம்

கூடவில்லை. 42 இலட்சம் மக்கள் ஒன்றி வாழும் சிறிய நாட்டிலேயே அரசியல் மொழி நான்கு என்று ஏற்றுக்கொள்ளப்படும்போது, ஏறத்தாழ 30 கோடி மக்கள் எண்ணிக்கையுடைய, மொழி வாரிப் பகுதிகளாகப் பெரும் பரப்புகள் பிரிந்து நிற்கக்கூடிய இந்தியத் துணைக்கண்டத்தில் உண் மையில் எத்தனை அரசியல் மொழிகள் கொள்ளப் படவேண்டும். அந்தந்தப் பகுதிமொழி அந்தந்தப் பகுதி அரசியல் மொழிகளாக ஆக வேண்டியது தானே இயற்கையான முறையாகும். இந்த மொழி வாரி மாகாண ஆட்சிகளைக் கண்காணிக்க இருக் கும் மத்திய அரசாங்கத்திற்கு ஒரு பொதுமொழி தேவைப்படுகிறது என்றால், அந்தப் பொது மொழியை மொழிவாரி மாகாண மக்களனைவரும் கட்டாயமாகக் கற்றுத்தீரவேண்டும் என்று என்ன அவசியமிருக்கிறது? ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கும் மொழிவாரிப் பகுதிகளுக்குச் சுதந்திர வுரிமை உண்டு என்ற அடிப்படையில் மத்திய ஆட்சி அமைக்கப்படுமேயானால், அந்த மத்திய ஆட்சி தன் நலத்திற்கென்று கொள்ளும் ஒரு பொதுமொழியை மொழிவாரிப் பகுதிகளில் சுமத்த விரும்பாது. மாறாக வலுக்கட்டாயமாகப் புகுத்த முற்படுமேயா னால், ல், அந்த மத்திய ஆட்சி பாஸிஸப் போக்கு கொண்டதாகும் என்றுதான் பெறப்படும். இந்தப் பொது இலக்கணப்படி பார்த்தால் இந்தியா துணைக் கண்டத்திற்கு ஒரே அரசியல்பொது மொழிதேவை யில்லை; கூடவுங்கூடாது என்பது தெளியப்படும்.

இந்தியாவில் தற்பொழுது 30 கோடி மக்கள் கனடாவில் 1 கோடி 50 லட்சம் மக்கள். அங்குள்ள அரசாங்கம் இரண்டு மொழிகளில் நடக்கின்றது. இந்த நிலையில் இந்தியாமட்டும் ஏன் ஒரே அரசியல் பொது மொழியில் நடைபெறவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது? சிந்தித்துப் பார்க்கவும்.