பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மொழிப் போராட்டம்

இந்தி பொதுமொழியா?

தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்று சாதிப்பது போல, எத்தகைய காரணங்களையும் கவ னியாமல் இந்தி பொதுமொழியாக வேண்டும் எனக் கூறுவோர், அது முடியுமா என்பதைச் சிறிது நேரம் சிந்திக்கவேண்டும்.

பொது மொழியைப் பற்றிக் காங்கிரஸ் போட்ட தீர்மானங்களைக் கவனித்தாலே இந்த கேள்வி இயற்கையாக எழும். இந்தி பொது மொழி யாகவேண்டும் என் று பாடுபட்டவர்கள் திடீ ரென்று இந்துஸ்தானி என்ற பெயருக்குத் தாவு வானேன்? பொதுமொழி இந்தியல்ல என்று காந் தியாரே ஏன் விளக்கம் கூறவேண்டும்? காங்கிரஸ் இந்துஸ்தானியைப் பரப்பப் பெருமுயற்சி எடுத்த போதாவது முடிந்ததா? கடைசியாகப் பொது மொழி யாவதற்குரிய சகல தன்மைகளையும் பெற் றிருப்பதாகக் கூறப்பட்ட இந்துஸ்தானி காங்கிர ஸாலேயே கைவிடப்பட்டதன் காரண மென்ன? இந்தியை இந்துஸ்தானி என்று அழைத்துத் திட் டத்தை மழுப்பப் பார்ப்பானேன்? ஏட்டிலே எழு தும்போதும், கேள்விக்குப் பதில் கூறும்போதும் சொல்லளவில் இந்துஸ்தானி என்று குறிப்பிட்டு விட்டு நடைமுறையில் இந்தியையே பாடத்திட்ட மாக வைப்பதன் கருத்தென்ன ?

ஒன்று காங்கிரஸின் பொதுத் தீர்மானத்திற் குக் காங்கிரஸ்காரர்களே துரோகம் செய்திருக்க வேண்டும்; அல்லது அவர்களால் முயன் றும் முடியா மற் போயிருக்கவேண்டும். முதற் காரணம் காங் கிரஸ் தலைவர்களின் கண்ணியத்தையே சந்தேகிப் பதாக இருக்கிறது. இரண்டாவது காரணம் தீர் மானத்தின் அடிப்படையிலே இருந்த தவறை எடுத்துக்காட்டுகிறது. இந்த இரண்டு காரணங