பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தி பொதுமொழியா?

69

களாலும் இந்தி-உருது இவைகளுக்கிருந்த சண்டை யைத் தீர்த்துவைத்துப்பொது மொழியை அமைக்க முடியவில்லை என்பது பெறப்படுகிறது. ஒன்றிற் கொன்று தொடர்புடைய மொழிகள்-இரண்டின் வரலாறுகளும் ஒன்றை ஒன்று பின்னிக் கிடக்குந் தன்மையன-இரண்டிற்கும் பொதுப் பண்புகளும் ஒரே இலக்கண, இலக்கிய அமைப்புகளும் இருக் கின்றன என்று இவ்வாறெல்லாம் உறப்பட்ட ந்தி-உருது இவைகளுக்குள்ளேயே ஒத்துப்போக முடியாத தன்மை இருந்தால், வடநாட்டு மொழிகளி னின்றும் தனித்த வரலாறு, கலாச்சாரம், இலக் கண இலக்கியப் பண்பாடுகளை உடைய தமிழ் முத லிய திராவிட மொழிகளிடை எவ்வாறு இந்தி வர முடியும்? வந்தாலும் எப்படி நிலைத்து நிற்கும் ? அப்படியே நிற்பதானாலும் எவ்வளவு நாட்களுக்கு நிற்கமுடியும்? வடநாடு-தென்னாடு என்று வழி வழி வந்த பிளவை நோக்கும்போது இந்தி தென்னாட்டில் ஒன்றி வாழ இடமேற்படாது என்று கொள்வதானா லும் கூட, வட நாட்டிலேயுள்ள உருது தவிர்த்த மொழிகள் கூட இந்தியை ஏற்றுக்கொள்ளுமா என்பது ஐயப்பாடே !

ளம்

1905-ல் கர்சான் காலத்தில் மாகாணத்தை இரண்டாகப் பிளக்கக்கூடாது என்று எந்த வங் காளம் போராடியதோ, அதே வங்காளம் இரண் டாகப் பிரிய 1947-ல் சம்மதித்தது. கிழக்கு வங்கா பாகிஸ்தானுடனும் மேற்கு வங்காளம் இந் தியாவுடனும் சேர்ந்தன. அப்படி அரசியல்-பொரு ளாதாரத் துறைகளில் இரண்டாகப் பிரிக்கப்பட்ட போதிலுங்கூட, மொழி வகையில் வங்காள மொழியை விட்டுக்கொடுக்க இரு பகுதிகளும் மறுக் கின்றன. கிழக்கு வங்காளத்தில் உருது அரசியல் மொழியாக ஆக்கப்பட்ட பொழுது எந்தப் பாகிஸ் தானுக்காக அவர்கள் ஓட்டுப் போட்டார்களோ