பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தி பொதுமொழியா?

71

யாகவும், பொது மொழியாகவும் ஆகவேண்டும் என்று வாதிடப்படுகிறது. இந்தி என்பது ஒரு மொழிக்கு மட்டுமல்லாமல் பலவகைப்பட்ட மொழி களுக்குக் குழுச்சொல்லாகத் தரப்பட்ட பெயர் என்பதையும், விளக்கினோம். இந்தி பெரும்பாலோ ரால் பேசப்படுகிறது என்று வாதிடப்படுமானால், அது தவறு என்பதை விளக்கிக் காட்ட ஒரே ஒரு சான்று போதும்.

1936 ஏப்ரல் திங்களில் இந்தி சாஹித்ய சம்மே ளனத்தில் தலைமை வகித்த பாபு ராஜேந்திர பிர ஸாத் தம் தலைமை உரையில், “புத்தகத்தில் சொல்லப் படுகிற இந்திமொழி மிகச் சிலருடைய தாய்மொழி யாகும்.) என்று ஒப்புக்கொண்டுள்ளார். இதை விடப் பல மான வேறு சான்றைத் தேடவும் முடியாது; அவ சியமுமில்லை. இந்தி இயக்கத்தின் இருப்பிடமாக விளங்கும் சபையில், சாதாரண சொற்பொழிவாள ராகவோ, தீர்மானத்தை ஆதரிப்பவராகவோ அல்ல, தலைவராக அமர்ந்து அவர் நிகழ்த்திய தலைமை உரையில், பிரசாரம் செய்யப்படுகிற இந்திமொழி ஒரு சிலருடைய தாய்மொழியே என்று கூறியுள்ளார். அந்த உரையிலிருந்தே நன்கு விளங்கும், நம்மிடம் கூறப்படுகிற இந்தி, பொது மொழியாவதற்கு ஏற்றதா என்பது!

று

மேல்நாட்டு இந்தி, கீழ்நாட்டு இந்தி என்று பிரிக்கப்பட்ட பெரும் பிரிவுகளிலுள்ள மொழி களில் ஒரு மொழி பேசுவோர் மற்ற மொழி பேசு வோரின் சொல்லைப் புரிந்து கொள்ள இயலாது என்று கூறப்படுகிறது. இந்த நிலை இங்கு சொல் லிக்கொடுக்கப்படும் இந்தியினை ஏந்திக் கொண்டு வடநாடு முழுவதும் எங்ஙனம் செல்ல முடியும் ?

இந்தி ஆதரிப்பாளர்களால் இத்தகைய கார ணங்களுக்கெல்லாம் தக்க பதில் கூற வழி வகை இல்லாத நிலையில் தென்னாட்டார் வடநாட்டாரோடு