பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தி பொதுமொழியா?

வேறு தேவையான மொழியையோ

73

கற்றுக்

கொண்டு செல்லட்டுமே ! இங்கேயே, என்றென் றும் வாழும் வண்டியோட்டும் வரதன் ஒகுப்பை மேட்டுக் குப்பன், வயலோர வேலன், சுற்றைக் கடை சுப்பன், வேலைக்கார முனியன் இன்னும் இவர் போன்று வேறுபல வேலைகளிலும் ஈடுபட்டி ருக்கும் கோடிக்கணக்கானவர்களுக்கு இந்தி தெரிய வேண்டுமென்ற அவசியம் என்ன இருக் கி கிறது. எதற்காக இவர்கள் மீதெல்லாம் இந்தி கட்டாயமாகவோ, விருப்பப்பாடமாகவோ அவசிய மற்ற முறையில் புகுத் தப்படவேண்டும் ?

தால்

வடநாட்டில் வாணிகம் செய்ய இந்தி தேவைப் படுகிறது என்று கூறுகின்றனர். வடநாட்டி லிருந்து தென்னாட்டிற்கு வந்து வாணிகம் செய் வோரையும், தென்னாட்டிலிருந்து வடநாடு சென்று வாணிகம் செய்வோரையும் கணக்கிட்டுப் பார்த் தென்னாட்டவரைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக வடநாட்டார் தென்னாட்டில் குடியேறியுள்ளார்கள். அவர்கள் அனைவரும் விருப்பப்பாடமாகக் கூடத் தமிழைக் கற்றுக் கொண்டு இங்கு வரவில்லை. வந்த பிறகும் கூட தமிழ்மொழியை எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் எண்ணவில்லை. இது போலவே தமிழ் நாட்டாரும் வட நாட்டிற்கு வாணி கம் செய்யச்சென்றால் இதைப் போன்று நடந்து கொள்ளுகிறார்கள். தைச் சிந்திக்க மறுக்கும் இங்குள்ள குடுகுடுப்பைகள் மட்டும்தான் இந்தி யைத் தமிழ் நாட்டாரனைவரும் கற்றுத்தீரவேண்டும் என்று ஓயாமல் கூக்குரலிட்டு வருகின் றனர்.

படை

வடநாட்டுப் பொருளாதார-வணிகப் யெடுப்பும், ஆதிக்கமும் தென்னாட்டில் இப்பொழுதே வலுத்துக்கொண்டு வருவதால், வடநாட்டாருக்கு எளிதான இந்தி இங்கு பரவுமேயானால் மேலும்