பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மொழிப் போராட்டம்

மேலும் இந்தப் படையெடுப்பு வளர வாய்ப்பு ஏற் பட்டுவிடும் என்பது மட்டுமல்லாமல், ஊர்தோறும் சௌக்கார்பேட்டைகள் தோன்ற வழியேற்படும், ஏராளமான பொருள் வலிவு படுத்த வடநாட்டா ரும் மேலும் மேலும் வந்து குடியேறிவிடுவார்கள். தென்னாடு-திராவிடம் - தமிழகம் என்றென்றும் நிலைத்த அடிமையாக வாழும்படி நேரிட்டுவிடும். இது வரலாறு கற்பித்துவரும் பாடமாகும்.

வட நாட்டாரோடு பழகவும், வாணிகம் செய்ய வும் ஒரு மொழி கற்றுக்கொள்ள வேண்டியிருக் கிறது. அதே நிலையில் உலகத்தோடு பழகவும், வாணிகம் செய்யவும் ஆங்கிலம் அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

வட

வரிந்த பரந்த உலகத்திற்காக ஒரு மொழியும், வட நாட்டிற்காக மட்டும் மற்றோர் மொழியும் க கற் றுக்கொள்ள வேண்டும். ஏன் இந்த வீண் வேலை? உலகத்திற்காகக் கற்றுக்கொள்ளும் மொழியையே வடநாட்டிற்கும் வைத்துக்கொள்ளலாமே! நாட்டிற்காக மட்டும் தனித்து ஒருமொழியைக் கற் றுக்கொள்ள நாட்டு மக்களின் நேரமும், நினைப்பும், உழைப்பும் ஆற்றலும் ஏன் வீணாகச் செலவழிக்கச் செய்யவேண்டும்? உலகத்திற்குத் தெரியும் ஆங் கிலம் வடநாட்டிற்கும் தெரியும்; ஆனால் வடநாட் டில் குறிப்பிட்ட பகுதிக்குமட்டும் தெரியும். இந்தி, உலகில் வேறு எந்த பாகத்திற்கும் தெரியாது. இந்தி நமக்காகச் செய்ய இருக்கும் உதவியைப் போல் ஆயிரம் மடங்கு அதிகமாக ஆங்கிலத்தால் செய்யமுடியுமே! எனவே இந்தி வாணிகத்திற்குப் பயன்படுவதாகும் என்று கூறும் கூற்றும் அர்த்த மற்றதாகிறது!