பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்கிலமே பொதுமொழியா தற்குரியது 75 ஆங்கிலமே பொது மொழியாதற்குரியது

வாய்மொழிப் பயிற்சியன்றி வேறுமொழிப் பயிற்சி ஏதும் வேண்டாமா என்று கேட்கத் தோன்றும் வெளியுலகுடன் தொடர்பு கொள்ள வும், விஞ்ஞான அறிவை வளர்க்கவும் வேற்று மொழியொன்று தமிழ் நாட்டிற்குத் தேவைப்படு கிறது. இப்பொழுது தேவையான அளவு விஞ் ஞான நூல்கள் தமிழில் இல்லை. காலப்போக்கில் அவை தமிழில் வளரும் என்றபோதிலும், அந்த நிலையில்கூட வேறு மொழியொன்று தேவைப் படும்.

இந்த இரண்டு காரணங்களுக்கும் இந்தி ஏற்ற தல்ல. இந்திமொழி தெரிந்திருந்தால் வடநாட்டில் ஐக்கிய மாகாணத்தில் மட்டும் தெளிவாகப் பேச முடியுமேயன்றி இந்தியா முழுமையுங்கூட வழங்க இயலாது. இந்த நிலையில் வெளியுலகுடன் தொடர்பு என்று நினைக்கும்போது, இந்தி என்ற எண்ணமே எழாது. விஞ்ஞான வளர்ச்சியில் இந்தி தமிழைவிட எத்தனையோதொலைவில் பின்னணியில் இருந்து வருகிறது. விஞ்ஞானக் கல்விக்கும் இந்திப் பயிற்சி பயன்படுவதில்லை.! பண்டித நேரு இதைப் பற்றிக் கூறும்போது,

இந்தி, உருது, இரண்டு மொழிகளும், தற்கால எண்ணங்களை, விஞ்ஞான, அரசியல் பொருளாதார, வியாபார, சில கலாச்சார கருத்துக்களைக்கூட வதற்கு முடியா த நிலையில் இருக்கிறது

சமயங்களில் விளக்கு

17

என்று கூ தெளிவுபடக் கூறினார். எனவே, எனவே, இந்தி மொழியின் வழியாக விஞ்ஞான அறிவையும், நாம் எவ்விதத்திலும் அடைய முடியாது. அந்தத் துறை யிலும் இந்தி நமக்குக் கிஞ்சிற்றேனும் பயன்படு வதாயில்லை.