பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மொழிப் போராட்டம்


இற்றைக் காலங்களில் விஞ்ஞான அறிவில் மேம்பட்டு விளங்கும் ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளே அவ்வறிவினைப் பெற பெரி தும் உதவிசெய்யும் மொழிகளாக இலங்கி வருகின் றன. அத்தகைய உயர்ந்த நிலை மற்றவைகளுக் கும் உண்டாகலாம்; இனிதான் உண்டாகவேண் டும். இப்பொழுதுள்ள நிலையில் இந்த மொழிகளில் ஒன்றின் துணையின்றி உலகிலுள்ள எந்த நாடும் விஞ்ஞான அறிவை எளிதில் பெறமுடியாது. இந்த மூன்று மொழிகளிலும் ஆங்கிலமே விஞ்ஞான அறிவு பரப்பும் சிறந்த மொழியாக விளங்குகிறது. அதுமட்டுமல்லாமல் ஆங்கிலந்தான் உலகப் பொது மொழியாகக் கொள்ளப்பட்டு, அதன்மூலம் பல் வேறு நாடுகளுக்கிடையே உறவு, பேச்சுவார்த்தை, ஒப்பந்தம், வாணிகம், பொது அறிவு விளக்கம், கலாச்சாரம் பரிமாறல் முதலிய பல செயல்களும் ஆற்றப்படுகின்றன. இந்தச் செயல்களில் ஒன் றினைக்கூட, இந்தியப் பொதுமொழியாக ஆக்க முயற்சி செய்யப்படும் இந்தியால் இந்தியால் நிறைவேற்றி வைக்க முடியாது. ஆங்கில மொழியை வைத்துக் கொண்டு உலகம் முழுவதும் சுற்றிவர முடியும் அதையே வைத்துக்கொண்டு இந்தியாவையும் சுற்றி வரமுடியும். ஆங்கிலம் இங்கிலாந்தைத் தவிர்த்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் முழுவதும் வழங்குவதுடன், கனடா, தென்னாப்பிரிக்கா, இந் தியா, பாகிஸ்தான், மலேயா, பர்மா, இலங்கை, நியூஜிலாந்து போன்ற தொடர்புடைய நாடுகளி லும் பரவியிருக்கிறது. உலகில் எந்த நாட்டிலும் எழுதப்படும் விஞ்ஞான நூலை உடனே மொழி பெயர்த்துக்கொடுக்கும் மொழி ஆங்கிலமே யாகும். கிரீக்கிய மொழிகளிலிருந்து மிகச் சாதாரண மொழி ஈறாக உள்ள பல்வேறு மொழிகளில் சிறந்து விளங் கும் இலக்கியச் செல்வங்களையெல்லாம் உலகோர்