பக்கம்:மொழியின் வழியே.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மொழியின் வழியே!

இலக்கியம் என்று வரும்போதும் கற்றோர் வழக்கு, கற்றோர் இலக்கியம் இவைகளையே தகுதியுடையனவாகக் குறிப்பிட வேண்டும். கல்லாதார் உரையும், பனுவலும், முறை பிறழ்ந்த இழி வழக்குகளும் (literate usage) மேற்கோள் ஆகமாட்டர். மொழியின் பண்பாட்டை இவை காரணமாகக்கொண்டு ஆராய்தலோ, குறைந்த தரத்தினதாக முடிவு செய்தலோ பொருந்துவது அன்று. மல்லிகைப் பூங்காவின் பாங்கர் ஆங்காங்கே படர்ந்த சிற்சில நெருஞ்சிச் செடிகள் இருந்தாலும் பூங்காவின் கவின் அதனாற் குன்றுவதில்லை. கல்லாதார் வழக்கும், நூலும் பண்பட்ட மொழியின் கவினைச் சிதைத்து விட இயலாது. இதே நேரத்தில் மொழியின் பண்பட்ட வளர்ச்சி நிலையை ஆராயும்போது இவை சான்றாகவும் இருக்க இயலாதனவாகின்றன. .

'வாளை மேய்ந்த

வளை கோட்டுக் குதிரை கோழிலை வாழைக்

கொழுமடல் உறங்கும் ஊரன் செய்த கேண்மை

தேரை வாலினும் பெரிதாகின்றே" (யா - விருத்தி)

என்பன போன்ற பனுவல்கள் பொருள் பயவாத வெற்றுச் சொற்கள் கூடி விளைந்த விளைவே. இவை மரபு, இலக்கணம், வழக்கு, இலக்கியம் ஆகிய எதனோடும் பொருந்தாதவை. எனவேதான் கல்லாதார் விரித்த பனுவலும் தெரித்த உரையும் மொழியின் பண்பாட்டை நிறைக்கப் பயன்படல் உறுதியாக இயலாதென்றும் குறைக்குந் திறமும் இல்லாதன என்றும் விலக்கப்பட்டன.

மரபைப் போற்றுதல் என்பது எழுத்து, சொல், பொருள், யாப்பு அணி என்னும் ஐந்து வகையானும் இன்றியமையாதது. இவற்றுள்ளும் வழக்கு, இலக்கியம் ஆகிய இரண்டுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/10&oldid=621355" இலிருந்து மீள்விக்கப்பட்டது