பக்கம்:மொழியின் வழியே.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மொழியின் வழியே!

எல்லாரிடமும் இருக்கிறது. விரைவில் இது செயலாக ஆக்கம் பெறவேண்டுமென்பதுதான் நம் ஆசை. சுவையான சம்பவங்களும் சிக்கல் இல்லாத அமைப்பும் சமூக நலனை வளர்க்கும் தன்மையும் கொண்ட நாவல்கள் தமிழ் மொழியிற் பெருக வேண்டும். காவியங்களையும், கவிதைச் செல்வங் களையும் படைத்தளித்த மகாகவிகளின் வழியிலே வந்தவர்கள் நாம். இன்றுள்ள தலைமுறையிலே கருத்துக்களைச் சொல்ல நாவல்களும் , சிறுகதைகளும் பயன்படுகின்றன. நம்முடைய தன்மதிப்பும் தமிழ் மரபின் பெருமையும் சிறிது கூடக் கெட்டு விடாதபடி அவற்றை நாம் எழுதி வளர்க்க வேண்டும்.

ஒவ்வொரு நல்ல நாவலும் நல்லதோர் காவியம். சரத் சந்திரரின் நாவல்களைப் படிக்கும் போது அவற்றைக் காவிய மாகத்தானே எண்ணுகிறோம்? தாகூரின் கோரா நாவலைப் படிக்கும்போது இந்த நாட்டின் இலட்சியக் கனவுகளே உருவாகி வந்தாற்போல் ஒர் இளைஞன் நம் கண்முன்னே தோன்ற வில்லையா? தமிழ் நாவலாசிரியர்கள் உலக இலக்கியத்தில் இணை சொல்ல முடியாத இடத்தினைப் பெற வேண்டும். சிறு கதை, நாவல், ஆகிய மறுமலர்ச்சி இலக்கியத்தின் நிகராக இந்த இடம் நமக்கும் கிடைக்க முடியும். நாவல் இலக்கியத்துக்குப் பத்திரிகைகளும், வாசகர்களும் விழிப்புடன் ஆதரவு தரும் இந்தச் சமயத்தில் நாவலாசிரியர்களின் திறமை முழு அளவிற் பயன்பட்டுத் தமிழை வளப்படுத்தட்டுமே! மற்ற மொழிகளுக்குத் தமிழ் இளைத்ததில்லை - என்ற பெருமை வந்தால் போதும் நமக்கு இளைப்பில்லாததோடு வளப்பமும் அதிகமென்ற நிலை வந்தால் பூரிப்பும் அடைவோம். 口