பக்கம்:மொழியின் வழியே.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 மொழியின் வழியே!

பத்திரிகைகளின் மொழி நடையை நினைக்கும்போதுதான் பூனை கண்மூடும் இந்த எடுத்துக்காட்டுத் தோன்றுகிறது. சுவரில் சித்திரமா? சித்திரத்தில் சுவரா? மொழியின் வளத்தைக் காப்பதற்காகப் பத்திரிகைகளா? அன்றி மொழியிலுள்ள வரன் முறைகளை அழித்து, நல்ல மரத்திற் புல்லுருவிபோலக் கெடுப்பதற்காகவா?

உதாரணமாகக்காந்தியடிகளை எடுத்துக்கொல்லுவோம்என்று லகர வாகர பேதம் தெரியாமல் கட்டுரை எழுதும் பள்ளிக்கூடத்துச் சிறுவனுக்கும், சந்திகளையும், வேற்றுமை உருபுகளையும், வழுமலியப் பயன்படுத்தி மொழி நடையைக் கறைப்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கும் அதிக வேறுபாடு இருப்பதாகத் தோன்றவில்லை!

இவர்கள் சிவஞானமுனிவர், சேனாவரையர் போன்று இலக்கண மேதைகளாக விளங்க வேண்டாம். சாதாரணமாகப் பிழையின்றி வாக்கியம் எழுதுவது எங்ங்னம் என்றாவது சிந்திக்க வேண்டாமா? வேலி எதற்காக பயிர் அழிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தானே? இலக்கணமும், மரபும் யாருக்காக மொழி நடையைத் தூய்மையாக இருக்கச் செய்ய வேண்டுமென்று கருதி இடப்பெற்ற வேலிகளல்லவா அவை? அவை தீமைக்காக அல்லவே?

நாளிதழ்களை வெளியிடுவோரிடமோ, ஆசிரியரிடமோ மொழி நடையின் தூய்மைபற்றி வற்புறுத்தினால், எங்களுக்குப் பல தொல்லைகள். இரவும் பகலுமாக ஓய்வின்றி உழைத்து நான்கு பக்கத்துக்குச் செய்திகள் திரட்டி வெளியிடுவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. இந்த இலக்கண மெல்லாம் பார்க்க எங்களுக்கு நேரம் ஏது ஐயா? - என்று அலுத்துக்கொள்ளுகிறார்கள். இந்த அலுப்பைக் கையாலாகாத் தனம் என்றுதான் சொல்லவேண்டும். இலக்கண வழுவின்றிச் செய்திகளைத் தரும் நாளிதழ்களும் ஒன்றிரண்டு வெளி வருகின்றனவே? அவற்றில் உழைப்பவர்களும் மனிதர்கள் தாமே? முயன்றால், உண்மையான பற்றும் ஆர்வமும்