பக்கம்:மொழியின் வழியே.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 02 மொழியின் வழியே!

திட்டம்' - என்பதைக் காந்தியடிகளின் நிர்வாணத் திட்டம் - என்றும் அச்சுக் கோக்கின்ற அச்சுக் கோப்பவரும் சேர்ந்து நாளிதழ் நடத்தினால் மொழி நடை எங்ங்னம் உருப்பட முடியும்?

நாளிதழ்களாவது போகட்டும். நேரமிகுதியும், அதிகம் உழைக்கின்ற வாய்ப்பும் உள்ள வார, மாத இதழ்களிலாவது நல்ல மொழி நடையைக் காண முடியுமா என்றால் அங்கும் அது கானல் நீராகவே இருக்கிறது. வார, மாத இதழ்களில் அச்சுக் கோப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாகப் பிழையின்றி அச்சுக் கோக்கலாம். சரிபார்த்துப் பிழை திருத்துபவர்களும் இரண்டு மூன்று முறைகள் ஒப்பு நோக்கித் தவறுகளைக் குறைக்கலாம். அவ்வளவும் செய்ய நேரமிருக்கிறது. ஆனாலும், ஏனோ செய்வதில்லை; ஆர்வமும் அக்கறையும் இல்லாமைதான் காரணமோ?

'ஒருவள் (ஒருத்தி) பஸ் ஸ்டாப்பில் வெயிட்' பண்ணிக் கொண்டு அந்த வாலிபனைப் பார்த்து மந்த ஹாஸ்மாக மலர்ந்த முகத்தோடு சிரித்துக்கொண்டிருந்தாள். (மந்தஹாசம் என்றாலும் முகமலர்ச்சி என்றாலும் ஒன்றுதான்)' என்றுகதை எழுதுகிறவனும்,

'தவறைத் (தவற்றை) திருத்திக் கொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொல்லுகிறோம்' - என்று கட்டுரை எழுதுபவனும்,

'அந்தக் காலத்திலே நமது கவர்மென்ட் இந்த சட்டத்தைப் போட்டது பிஸ்கு. இப்போதாவது உனர்ந்து நீக்கக் கோறுகிறோம். (கோறுகிறோம் என்பதில் வல்லின 'று போட்டால் 'கொல்லுகிறோம் என்பது பொருள்) - என்று தலையங்கம் எழுதும் ஆசிரியனும் சேர்ந்து ஒரு வாரப் பத்திரிகை நடத்தினால் மொழி நடை பிழைக்குமா?

இப்போது கதை கட்டுரைகள் எழுதி வார, மாத,

இதழ்களை நிறைப்பவர்களில் பலருக்குச் சந்தியிலக்கணம், மரபிலக்கணம், தொடரிலக்கண்ம், ஒருமை பன்மை வேறுபாடு