பக்கம்:மொழியின் வழியே.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 103

இவைகளெல்லாம் மிகுதியாகத் தெரிந்தவைகள் அல்ல! தெரிந்து கொள்ள வேண்டும் என்று எடுத்துச் சொன்னால், 'நாங்கள் புதுமையாளர்கள். இஷடம்போல எழுதுவோம்! எங்களுக்கு உரிமை உண்டு. பழம் பண்டிதர்களின் அடக்கு முறை எங்களுக்குத் தேவையில்லை - என்கிறார்கள். மொழியைத் தூய்மையாகவும் நன்றாகவும் பயன்படுத்தினால் மொழிக்கும் எழுதுகிறவனுக்கும்தான் பெருமை. பண்டிதர்களுக்கு மட்டும் அ)ெ)ெ. -

இப்போது கதை எழுதுகிறவர்கள் 'கொச்சை மொழிகளையும், பிறமொழிச் சொற்களையும் எவ்வளவிற்குக் கலக்கலாம்? - என்று ஒரு வரம்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கதைகளிலும், நாடக வழக்கிலும் கொச்சையை அறவே இல்லாமற் செய்துவிட முடியாது. அளவுடன் பயன் படுத்தலாம். வாக்கிய அமைப்புக்கள், ஒருமை, பன்மை முடிபுகள், சந்திமிகுமிடம், இயல்பாகும் இடம் - இவை யெல்லாம் நிச்சயமாக இன்றைய எழுத்தாளர்களில் பலருக்குத் தெரியவே தெரியாது.

வாழைபழம், கீரைகறி, என்று சந்திமிக வேண்டிய இடங்களில் மிகச் செய்யாமல் பிரசித்திப்பெற்ற பள்ளிச் சென்றான்' - என்று மிகத் தேவையில்லாத இடங்களில் காது கசக்கும்படி மிகச் செய்துவிடுகிறார்கள். அது அல்ல - என்றும் அவை அன்று அவர்தான் என்றும் அவன்தாம்’ என்றும் ஒருமை பன்மையைக் குழப்புமிடங்கள் கூறிமுடிய மாட்டா! -

வேட்டையாடத் தெரியாதவன் புலிக்கு முன்போய்ப் பயன்படுத்தத் தெரியாமல் வில்லைப் பிடிப்பது போலப் பயங்கரமானது, மொழி நடை தெரியாதவன் எழுதத் தொடங்குவது. தூய்மையான மொழி நடையே எழுதுபவனுக்கு உயிர்நிலை. ஒட்டைக் கிண்ணத்தில் எண்ணெய் தங்குமா? ஒழுங்கும், மரபும், இலக்கணமும் இல்லாத மொழி நடையில் கருத்துக்கள் தங்குமா? தங்கத்தான் முடியுமா?