பக்கம்:மொழியின் வழியே.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 மொழியின் வழியே!

வரம்பு இன்றிப் பயிர் செய்து ஏமாறக்கூடாது. தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் தங்களுக்கு ஏற்கெனவே இருக்கும் பல்வகைச் சிறப்புக்களோடு, மொழி நடையைத் தூய்மையாகப் பயன்படுத்தல் - என்ற புதிய சிறப்பையும் பெற்றுப் போற்ற வேண்டும். இல்லையானால் மற்றைய சிறப்புக்களும் அழிய வெகுநாளாகாது.

மொழி நடையின் தூய்மைக்கென்றே உழைக்கும் பத்திரிகைகளும் சில இங்கேதான் இருக்கின்றன. எல்லா இதழ்களுமே இந்த நல்வழியைப் பின்பற்றினால் தமிழ் ஆட்சி மொழியானதன் பயனைவிடச் சிறந்த பயன் மக்களுக்குக் கிடைக்கும். படித்தவர்கள் பத்திரிகைகளை எடுத்துப் பார்க்க வெட்கப்படும் நிலையும் மாறும். தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் தமிழ்மொழி வளர்ச்சிக்காகப் பாடு படுவது மெய்யானால் தூய மொழிநடையை மேற்கொள்ளும் நற்பணியை முதலில் தொடங்கட்டும். -

இறுதியாக ஒரு வேண்டுகோள். மொழியைப் பாது காக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. அது தானாகப் பாதுகாப்புப் பெற்றுவிடும். அதன் தூய்மையைக் கெடுத்துக் கறைப்படுத்தும் பணியை அல்லது பழியை நீங்கள் செய்ய வேண்டாம்.

'நல்லது செய்தல் ஆற்றி ராயினும்

அல்லது செய்தல் ஒம்புமின், அதுதான்

எல்லாரும் உவப்பது...' - என்று பாடியதைப் படித்தவர்கள் தமிழர்கள்; பாடிய வனும் தமிழன்; பாடிய மொழியும் தமிழ். இந்தப் பொன் மொழி பிறந்த தமிழ் நடையைப் புண்மொழிகளால் வழுப் படுத்தலாமா? வேண்டாம். தூய மொழி நடையே இனி முயல்வோம்! - - о