பக்கம்:மொழியின் வழியே.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மொழியின் வழியே!

சிறைவான் புனல் தில்லைச்

சிற்றம் பலத்தும் என் சிந்தையுள்ளும்

உறைவான் உயற்மதிற்

கூடலின் ஆய்ந்த ஒண் தீந்தமிழ்

(திருக்கோவையார்)

என அடைமொழி தொடுத்துப் பாடிய புலவர்கள் வாளா நிற்கத் தொடுத்துச் சென்றார்களில்லை. 1) பண்ணுற' என்றும், 2) தெரிந்து ஆய்ந்த என்றும் 3) பசுந்தமிழ் என்றும் நிரல் படச் சொற்களைத் தொடுத்திருக்கும் முறையில் 1) தமிழ் மொழியின் உயர் தனிச் செம்மொழியாகிய பண்பாட்டையும், 2) பழவழக்குகளையும் இலக்கியங்களையும் தெரிந்து ஆராய்ந்து போற்றவேண்டிய கடமையையும், 3) கவர்ச்சி நிறைந்த தூய்மையையும் பரஞ்சோதி முனிவர் சிறப்பாகக் கூறிச் செல்கின்றார். ஒளியாகப் பண்பட்ட நிலையையும், குண இயல்பாக இனிமையையும் அடைமொழிகளாக்கி 'ஒண் தீந்தமிழ் என்று மாணிக்கவாசகர் கூறுகிறார்.

மரபும் இலக்கணமும் ஏதுக்களாக வருகின்ற தூய்மை தமிழ் மொழியைப்பொறுத்தமட்டில் முற்றிலும் அமைந்திருக்கும் ஒன்றே. புதிய புதிய இலக்கணஆசிரியர்கள்கூடத் தானெடுத்து மொழிதல்', 'ஆசிரிய வசனம்", பிறன் கோட் கூறல் என உத்திவகையால் மரபை மீறாதிருக்கும் கட்டுப்பாட்டைத் தமிழ் மொழியிற் காண்கிறோம். ஒரு மொழியின் பண்பட்ட நிலைக்கு இதனினும் மிக்கசான்று வேறொன்றும் வேண்டுமோ?

'முன்னோர் மொழி பொருளே.

யன்றி யவர் மொழியும் பொன்னே போற் போற்றுவ

மென்பதற்கும் - முன்னோரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/12&oldid=621357" இலிருந்து மீள்விக்கப்பட்டது