பக்கம்:மொழியின் வழியே.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | 8 மொழியின் வழியே

பொருந்தும். இனிச்சுவைகளினுள் இதுவே மங்கலம் மிக்க தாகலின் முற்கூறினார் என்றால் அக்கூற்றில் ஒர் சிறப் பின்மையின் பொருந்தாது. நகைச் சுவைக்கு மறுதலை யாகலின் அழுகை என்னும் அவலத்தை அதன்பின் வைத்தார். அல்லது இன்பியல், துன்பியல் இரு பாகுபாடும் சுவைகட்குத் தலைமை பூண்டு நிற்றலின் சிறப்பிற்றாகிய இன்பியல் கூறித் துன்பியல் கூறினார் என்று சொல்லுதலும் பொருந்தும்.

இவ்வாறு நாடக நிலையுள் வேண்டப்படும் சுவை தலைமைபற்றி இரண்டே என்று Tragedy, Comedy என வேண்டுவார் மேல்புல நூலாரும். யாங்ங்னமெனின் உவகை பெருமிதம் என்பன நகையினுள்ளும், இளிவரல் அச்சம் என்பன அழுகையின் கண்ணும், மருட்கை வெகுளி என்பன அவ்விரண்டன்கண்ணும்பட்டு எட்டுச் சுவையின் இயக்கமும் இன்பியல், துன்பியல் என்னும் நாடக நிலை முடிவான இரண்டு சுவைகளுள் அடங்கிவிடும். உவகையின் பிறப்பகம் நகையாகலானும், பெருமிதம் என்பது இறுமாப்போடு பீடுபட்டதொரு உவகையே ஆகலானும், அவ்விரண்டும் நகையினுள்ளே அடங்கும் என்பது.

இளிவரல், அழுகை புலப்படாது தோன்றும் ஒரு வகைக் குறிப்பொடு நெறிப்படும் அவலமே ஆதலானும், அச்சம் என்பது 'இனி என்ன அவலம் நிகழுமோ? என அவலத்தை எதிர்நோக்கி நிற்கப் பிறக்குமோர் சுவையே ஆதலாலும் அவ்விரண்டும் அழுகையுள் அடங்கும் என்பது. மருட்கை என்னும் வியப்புச் சுவை உவகை, பெருமிதம், அச்சம் முதலிய யாவும் அடிப்பட நிகழ்வதாகலின் இன்பியல் துன்பியலாகிய நகை, அழுகை இரண்டனுள்ளும் அடங்கும் என்பது. வெகுளிச் சுவை தன்னை மாற்றான் நக்க வழியும், தன்மாற்றான் உவந்த வழியும், அவன் பெருத்த இறுமாப் பெய்தும் வழியும் தோன்றுவதேபோல, எஞ்ஞான்றும் தான்