பக்கம்:மொழியின் வழியே.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. மொழியும் புதிய விளைவுகளும்

ஆங்கிலம், இந்தி, வடமொழிகளின் தொடர்பால் சிதைந்து கெட்ட வாக்கியங்களும் தமிழில் களையாய் முளைத்து வழங்குகின்றன. தமிழ்ப் பெண்ணுக்கு வெள்ளைக் காரியின் "கவுண் அணிந்தமாதிரியும், வெள்ளைக்காரப் பெண்ணுக்குத் தமிழ்ப் புடைவையைக் கட்டினமாதிரியும், சில வாக்கியங்கள் உண்டாகி வழங்குகின்றன. பல மொழிப் பயிற்சி காரண மாகவும், பெரிய மனிதர்களின் வாய்களில் புகுந்து புறப் படுகிற பெருமையைக் கண்டும், பலர் இத்தகைய வாக்கி யங்களை அங்கீகரித்தாலும் இவை தமிழ் மொழி மரபுக்கு ஏலாதவை. -

'நான் அதற்கு முயற்சிக்கிறேன்."

'இரயிலில் உங்களுக்குப் பக்கத்தில் எனக்கும் கொஞ்சம் இடம் போட்டு வையுங்கள், !

'அந்த விழாவில் அவசியம் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது நடந்தது. நீங்கள் மிகவும் மோசமானவராக இருக்கிறீர்கள்'

'பரீட்சார்த்தமாக இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டு மென்பது என்னுடைய உத்தேச பூர்வமான நோக்கமல்ல." அருகாமையில் உள்ள இடம்."

'முயல்கிறேன் - என்றெழுதினாலே தன் வினை ஒருமையில் அமையும். 'முயற்சிக்கிறேன்' என்பது பிழை. 'இடம் ஒழித்து வையுங்கள் இடம் விட்டுவையுங்கள் - என்பது மரபுக்கு ஏற்கும். இடம் போட்டு வையுங்கள் எனப் போடுதல் என்ற சொல்லைப் பயன்படுத்துதல் தவறு. பங்கு எடுத்துக் கொள்ளுதல் - என்பது டேக் பார்ட் என்ற ஆங்கிலத்