பக்கம்:மொழியின் வழியே.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 125

மிடத்தில் நின்று வாக்கியத்தை நிறைவேற்றிக் காட்டுவது தான் தமிழ் வாக்கியமுறை. என்று' - என வினையெச்சம் கடைசியில் நிற்கும்படி எழுதுவது புதுமையாக விளைந்து வருகிற களை. g

'தண்ணீர்த் தடங்களிலே, தாமரைப் பொய்கைகளிலே, முந்நீர்க் கழிகளிலே, மூலைக் கரைகளிலே, சாலைத் துறை களிலே, கேணிசுவல்களிலே, கிணற்றுப் பள்ளங்களிலே - எங்கும் வெள்ளப்பெருக்கு எங்கும் நீர்ப் பிரளயம்; எங்கும் ஊழிப்புனல். - என்று ஈற்றசை ஏகார ஒலியை அடுக்கிக் கவிதை ஆவேசத்தைத் தேவையில்லாத இடத்திலே வர, வேற்றுக்கொண்டு, இழுத்துப் பறித்து வர்ணித்தே தீருவேன்' என்று பிடிவாதம் பிடித்து எழுத்தாக்கும் வெற்றுச்சொல் வெடிகளும் இப்போது அதிகமாகி வருகின்றன.

'எண்ணத்தில் மண்ணைத்துரவுகிறாயா கண்ணே உன் கன்னத்தை மின்னலென்றால் காதில் கன்னலென ஒலிக்குதே அச்சொல் செந்நெற் கழனிகளிலே செந்தமிழர் கூட்டம் அன்னக் காவடிகளாய் உழைத்து என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கிறது பார். பார்த்து மனம் குமுறு என்று இந்த மாதிரி அர்த்தமில்லாமல் எதுகை மோனைகளைப் போட்டு எதையாவது எழுதினால் அதை அழகென்று சொல்லப் பாமரர்கள் இருக்கிறார்கள். செங்கற்களைத் தாறும்ாறாக அடுக்கிப் போட்டுவிட்டால் வீடாகிவிடாது. ஒலி ஒற்றுமை யுள்ள சொற்களை மனம்போன போக்கில் அடுக்கி மருட்டுவது நடையழகு அன்று. இம்மாதிரி எழுதுகிற அசட்டுத் தனமான தொத்துநோய் இளைஞர்களிடமெல்லாம் வேகமாகப் பரவி வருகிறது. 'நடை இயல்பாக வரவேண்டியது. திருடன் இராஜ பார்வை பார்க்க முயல்கிற மாதிரி மொழிப் பயிற்சி இல்லாதவன் செய்கிற அசட்டுத் தனங்களை எல்லாம் சிறந்த நடை என்று ஒப்புக்கொண்டு விட்டால் புலமையும் மரபும் என்ன ஆவது? . . . . . x - - -