பக்கம்:மொழியின் வழியே.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 127

விதமான கருத்துக்களைப் பாடப் புத்தகம் எழுதியவர்களைச் சாருமோ என்று கூடச் சிலர் நினைப்பதற்கு நியாயமிருக்கிறது. சொல்வதற்கு எடுத்துக்கொண்ட பொருள் எவ்வளவு இனிமை யானதாகவும், சுவையானதாகவும் இருந்தாலும் தாங்கள் அதைச் சொல்கிற விதத்தால் படிக்கிறவனுக்குக் கசப்பும் அலுப்பும், உண்டாகச் செய்துவிடுகிறார்கள் பாடப் புத்தகக் காரர்கள். r

'இன்றைக்குச் சற்றேறக்குறைய . 'மிகையல்ல - நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம் - உணரற் பாற்று' - இளமை தொட்டே சாலச்சிறந்தது - என்று இம்மாதிரிப் பத்திருபது வார்த்தைகள் மேலோட்டமாக ஒரு அச்சுப் புத்தகத்தைத் திறக்கும்போது தெரியுமானால் அது நிச்சயமாக ஒரு தமிழ்ப் பாடப் புத்தகம் என்று தீர்மானம் செய்துவிடலாம். இந்த வார்த்தைகள் வரக்கூடாதென்பது இல்லை. திரும்பத் திரும்ப வர வேண்டாம். ஒரே புத்தகத்தின் அடுத்தடுத்த பக்கங்களில் அடுத்தடுத்த வாக்கியங்களில் வருவது வாக்கிய அழகைச் சிதைக்கிறது. செய்யுளிலே ஒரே சொல் திரும்பத் திரும்ப வந்தால் அது சொற் பின் வரு நிலை என்னும் அணி ஆகிவிடுகிறது. செய்யுளுக்கு அணி ஆகிற அதுவே வசனத்தில் வந்தாலோ அழகைக் குறைத்துவிடுகிறது. சுவையும், அழகும், உணரமுடிந்த விதத்தில் அரும்பு உள்ளங்களை மலர்விக்கப் பயன்டாத எழுத்தைப் பாடப் புத்தகங்களில் காணும்போது தான் மனம் வருந்துகிறது. அநியாயமாக வரவழைத்துக் கொண்ட ஒரு வறட்டு முதுமையை அல்ல்து இயல்பாக முதிராத வலிந்த முதிர்ச்சியைப் பாடப் புத்தக ஆசிரியர்களின் எழுத்தில் காண்கிறோம். புதிய ஆர்வம் உள்ளத்து எழுச்சி, நளினமான நினைவுகள், இவற்றை வளர்ப்பதற்குப் பதிலாக முடக்கி ஒடுக்கி அழிப்பதற்குத்தான் பாடப் புத்தகங்கள் பயன் படுகின்றனவோ என்றும் பயப்படுகிறார்கள். இந்தக் கால் நூற்றாண்டாகத் தயாராக இருந்த ஏதோ ஒரு இயந்திரம்