பக்கம்:மொழியின் வழியே.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 மொழியின் வழியே!

மாறாமல், குன்றாமல், ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப அடித்துத் தள்ளியிருப்பதுபோல் தோன்றுகிறதே ஒழியப் புதிய ஆட்கள், புதிய புதிய பெயரில் புதுப்புதுப் பாடப் புத்தகங்களை எழுதியதாகத் தோன்றவில்லை என்று வேடிக்கையாகச் சொல்வதற்கும் இடமிருக்கிறது. ஆக இரண்டு வகையிலும் வளர முடியாமல் இரண்டுங் கெட்டானாக இருக்கிறோம். புதுமையை வளர்ப்பதாகச் சொல்லிக் கொள்கிறவர்கள் நியாயத் தையும், மரபையும் மீறிக்கொண்டு அநியாயப் புதுமையில் புகுந்து விடுகிறார்கள். பழமையைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொள்கிறவர்கள், அழகையும் சுவையையும் புறக் கணித்து வறட்டுத் தனமான அநியாயப் பழமையில் இறங்கி விடுகிறார்கள். நியாயமான பழமையும், நியாயமான புதுமையும், கலந்து வருகிற வளர்ச்சிக்கான சூழ்நிலை தமிழ் இலக்கியத்துக்கு இன்னும் சரியாகக் கிடைக்கவில்லையோ - என்று தோன்றுகிறது. தகப்பன் மகன் சண்டை மாதிரி அல்லது அண்ணன் தம்பிச் சண்டை மாதிரிப் பண்டிதர்களுக்கும், மறு மலர்ச்சி எழுத்தாளர்களுக்கும் ஏதோ ஒரு புகைச்சல் வெளிப் படையாகவோ, மறைமுகமாகவோ, இருந்து வருகிறது.

தமிழ் புதிய வளர்ச்சியைப் பெறுவதற்குப் பழமையின் ஆசியும் அறிவுரையும் வேண்டும். புதுமையின் உழைப்பு வேண்டும். இரண்டும் அல்லது இரு சாராரும், பிணங்கிக் கொண்டே இருப்பதில் அர்த்தமே இல்லை. பழைய பிடிவாதங்களை வைத்துக் கொண்டிருப்பவர்கள் புதிதாக வளருகிற தலை முறைக்கு வழிகாட்டி ஊக்கமும், உற்சாகமும் அளித்து வாழ்த்துவதற்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள். புதியவர்கள் பழமைக்கு நியாயமாகச் சேரவேண்டிய நன்றியைச் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். 亡于