பக்கம்:மொழியின் வழியே.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - . x- 131

யாடலாகப் பேசும் பேச்சிலும், சொற்பொழிவிலும் செய்யப் படும் தவறுகள் காற்றோடு போய்விடும். எழுத்தில் செய்யப் படும் பிழைகளோ செய்தவரின் பொறுப்பின்மைக்கு நிவைத்த சான்றாக என்றும் இருந்துவிடக்கூடியவை. தன் மனைவிக்கும், தனக்குமே போதிய உணவு உடை கிடைக்காத குறைந்த வருமானமுள்ள ஒருவன் கட்டுப்பாடாக, சிக்கன வாழ்வு வாழாமல் மேலும் மேலும் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு போவதைக்கூட மன்னித்துவிடலாம். பொறுப் பில்லாதவற்றைப் பொறுப்பில்லாத முறையில் எழுதிக் கொண்டு போவதை மன்னிக்கவே முடியாது. இலக்கியமும், இலக்கியத்தின் பல்வேறு துறைகளும், ஒரு சீராக வளர வேண்டுமென்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால், அந்த வளர்ச்சி ஒரு பொறுப்புணர்ச்சியோடு நிகழவேண்டுமென்பதுதான் இங்கே வற்புறுத்தப்படுகின்றது.

அறிவும் பொறுப்பும்

நிரம்பிய அறிவு இருக்குமிடத்தில் சான்றாண்மை இருக்கும். சான்றாண்மை யிருந்தால் பொறுப்புணர்ச்சி தானே உண்டாகும். இன்று நாட்டில் அறிவை, இலக்கியத்தை, கல்வியை, இவை போன்றவற்றை வளர்க்கும் கருவிகள் பெருகியுள்ளன. அவற்றை நெறியறிந்து பயன்படுத்தும் பொறுப்புள்ளவர்கள்தாம் இன்னும் பெருகவில்லை போலும். பொறுப்புள்ளவர்கள் பெருகுவதற்கு என்ன செய்யவேண்டும்? முறையான படிப்பும் பண்புமுள்ளவர்கள் புதுமை இலக்கியத் துறையில் புகவேண்டும். X- ... x

புதுமை இலக்கியம் என்று இங்கே குறிப்பிடுவது கால் நூற்றாண்டாகத் தமிழில் தோன்றி வளரும் புனைகதைகள், நெடுங்கதைகள், நாடகங்கள், நகைச்சுவைக் கட்டுரைகள் போன்றவற்றையே ஆகும். புது முறையில் எழுதப்படும் கவிதைகளையும் இதிற் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றில்