பக்கம்:மொழியின் வழியே.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மொழியின் வழியே!

அதிகமாக முன்பே வளர்ந்தும், இனி வளர்ந்துகொண்டு மிருப்பது கதை இலக்கியம். தமிழ் மொழியில் மட்டும் ஓராண்டுக்கு ஐயாயிரம் சிறுகதைகளுக்குக் குறையாமல் பல்வேறு இதழ்கள், தொகுதிகள், வெளியீடுகள் மூலமாக வெளியாகின்றன. ஆண்டுக்கு ஐம்பதுக்குக் குறையாமல் நாவல், நெடுங்கதை, தொடர்கதை போன்றவைகளும் வெளி யாகின்றன. இவற்றில் பொறுப்புணர்ச்சியோடு, அறிவின் கணிவை வெளிப்படுத்தும் முறையில் வெளிவருபவை எவ்வளவின என்று சிந்திக்க முற்படுவது பிழையன்று. ஆயினும் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு முன்னால், அநுபவங்களைக் கருத்தாக வெளியிடும் எண்ண வளம் பெருகுவதற்கு முன்னால், ஆசை ஒன்றையே, புகழ் வேட்கை (டை) ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு எழுதப்பட்ட எழுத்துக்கள் கால வெள்ளத்தை எதிர்த்து நீந்த முடிவதில்லை. உலக அரங்கிலே அத்தகைய எழுத்துப் படைப்புக்கள் ஏறி நின்றால் தமிழ் மொழியின் பெருமைக்கும், பண்பாட்டுக்கும் பெருமை தேடித் தருபவை சிலவற்றினும் சிலவாகவே இருக்கமுடியும். -

வரதட்சணைக் கொடுமை, திருமணக் குழப்பங்கள், மாமியார் மருமகள் போர், இயற்கையோடு பொருந்தாத காதல் நிலைகள், இவற்றை வழுச் சொற்புணர்வு மிகுந்த நடையால், எழுதிக் காட்டுபவைகளே மிகுதி. மனப் பிடிப்பின்றி, வயிற்றில் ஒட்டாமற் போகும் சத்துக் குறைந்த உணவு போல்வனவே கதைக் கூட்டப் புதர்களாக மண்டியிருக் கின்றன. அந்தப் புதரில் சில மாணிக்கங்களும் உண்டு. அதை நாம் மறுப்பதற்கில்லை. மறைப்பதோ மறப்பதோ கூட விரும்பத் தக்கதன்று. பொறுப்பினையுணர்ந்து பணி புரிபவர்கள் சிலர் எங்கும் இருக்கத்தான் இருக்கிறார்கள். ஆனால் பொறுப்பை யுணராதவர்கள் பலராக இருக்கிறார்களே என்றுதான் வருந்தவேண்டியிருக்கிறறது. வங்கநாட்டுப் புதுமை