பக்கம்:மொழியின் வழியே.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 மொழியின் வழியே!

பட்டவைதாம். விதை நெல் அழிந்துபோனால் வளமான பயிர்களை உருவாக்க முடியாமற் போய்விடும். மின்சார வயரில் ஒளியை உமிழும் ஆற்றல் வாய்ந்த செப்புக் கம்பிகளை ரப்பரும் பிற குழலும் மூடி மறைத்துக்கொண்டிருக்கிற மாதிரிச் சக்தி வாய்ந்த அறம்தான் உலகியல்களின் உள்ளே மூடுண்டு மறைக்கப் பெற்றுக் கிடக்கிறது.

சமயமும் அறமும்

சமய நூல்களையும், இலக்கியங்களையும் விட அற நூல்கள் உயர்ந்தவை. பயிரைக் காட்டிலும் வித்துக்கள் உயர்ந்தவை அல்லவா? தனி அற நூல்கள் எல்லாச் சமயங் களுக்கும் பொதுவாக உண்மைகளை உரைக்கும். சமய நூல்கள் தத்தம் சமயங்களின் அளவிற்கும், எல்லைக்கும் ஏற்ப அறங்களின் பயனை அமைத்து உரைக்கும். இலக்கியங்கள் தீபத்தை எரிக்கப் பயன்படுவதற்காக எண்ணெய் ஊற்றிக் கொள்வதுபோல வேண்டிய இடங்களில் வேண்டிய அளவு அறத்தின் சாயலும், உண்மைகளின் சாயலும் படுமாறு கூறி -346Ճ) Լ0Լ165) նմ.

கோதுமை உணவு எல்லோருக்கும் நல்லது என்று பொதுப்படக் கூறுவது போன்றவை தனி அற நூல்கள். 'இன்னாருடைய கடையில் இன்ன வகையைச் சேர்ந்த கோதுமையை வாங்கிச் சாப்பிட்டால் நல்லது - என்று உண்மை பயன் தரும் இடத்தை ஒருவரோடு சார்பு படுத்திக் கூறுபவை போன்றனவே சமய நூல்கள். அவ்வாறன்றி ஒரு படி காய்ச்சிய பாலில் சிறிது குங்குமப்பூத் தூவினாற்போலக் காவியம் முழுதினுள்ளும் கலந்து நிற்கும் அறம் குறை வாயினும் மணம் யாண்டும் மணக்குமாறு அமைபவை போல்வன இலக்கியங்கள். -

'அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.'

என்று இப்படிச் சொல்லி அறிவுறுத்துவது தனி அற நூல்.