பக்கம்:மொழியின் வழியே.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 141

என்று எல்லாச் சமயத்தார்க்கும் பொதுவான அறத்தை வள்ளுவர் எவ்வளவு அழகாகக் கூறியுள்ளார். எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கு இயல்பு' - என்று மேற்படி குறளின் உரையில்ே வள்ளுவருடைய பொது அற விருப்பத்தை விளக்கிப் பரிமேலழகரும் எழுதியிருக்கிறார்.

'ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஒதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை” என்று சமய வேறுபாடுகள் இன்றி எல்லாச் சமயத்தாருக்கும் பொதுவான அறத்தைக் கூறுவதுதான்தனி அற நூலின் இயல்பு. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை இத்தகைய தனி அற நூல்களே. இந்த வகையைச் சேர்ந்த தனி அற நூல்களின் முழுமையான எழுச்சிக் காலம் ஒன்று தமிழில் இருந்தது. தனித் தனியாக

ஆனால் அந்தத் தனி அற நூல்களின் எழுச்சி சைவம், வைணவம், சமணம், பெளத்தம் என வகை வகையாகப் பிரிந்த சமய உணர்ச்சிகளிலே கரைந்து போயிற்று. எல்லாச் சமயங் களுக்கும் பொதுவான அறங்களையும் கடைப்பிடிக்காமல் அந்தந்தச் சமயங்களுக்கென அமைந்த சிறப்பான அறங் களையும் கடைப்பிடிக்க இயலாமல் தோன்றியபடி வாழ்கிற நிலையே இந்தக் காலத்தில் மிகுதியாகிவிட்டது.

வைணவர்கள் திருவாய் மொழிதான் தமக்கு உரிய தென்றும், சைவர்கள் திருவாசகம்தான் தமக்குரியதென்றும், சமணர்களும், பெளத்தர்களும் சிந்தாமணியும், மணிமேக லையுமே தமக்குரியவை என்றும் அறவுணர்வைத்தத்தம் சமய நூல்களோடு சார்பு படுத்திப் பார்க்கத் தொடங்கினால் எல்லோருக்கும் பொதுவான அற வுணர்வு என்ன ஆவது? ஒரு ஊரில் ஒரு தெருவில் அத்தனை வீட்டுக்காரர்களும், தங்கள்