பக்கம்:மொழியின் வழியே.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மொழியின் வழியே!

சான்றுகளோடு உறுதி செய்யக்கூடியது. போர், பூசல்களையும், அரசாட்சிக்கு இருவேறு வேந்தர் போட்டியிடுதலையும், ஒழுக்க வரையறை கடந்த அரசியற் சூழ்ச்சிகளையுமே பெரும்பாலும் உலக வரலாறுகள் பரக்கவிரித்துப் பேசுகின்றன. தமிழகத்து வரலாற்றில் இவைகட்கு ஒரு சிறிதும் இடமில்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், இவைகள் மிகக் குறைவான அளவிலும் ஒழுக்கத்தையும் அறவுணர்ச்சியையும் வற்புறுத்தும் உண்மைகள் நிறைந்த அளவிலும், தமிழகத்து வரலாறு விளங்கும். ஒழுக்கமும், அறமும், அவையிரண்டுங் கலந்த பண்பாடும் உலகின் வேறு எந்த வரலாற்றிலும் இவ்வளவு கலந்ததுங்கூட இல்லை. போரிலும் கூட, வடக்கிருந்து மானங்காக்க உயிர்விடும் அரசர்களையும், பகைவன் கை நீர் பருக நாணி உயிர் துறந்த கணைக்கால் இரும்பொறைகளையுமே நாம் காண்கிறோம். வரலாற்றின் படிப்பினை

நம்முடைய வரலாறு ஒழுக்கத்தையும் அற நூல்கள் விவரிக்கும் உண்மைகளையும் எடுத்துக் காட்டுகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக அதில் மனிதப் பண்பு மாண்புற்று விளங்குகிறது. அங்கே வாழ்க்கையை மலர்வனமாகக் காண்கிறோம். வெறும் போர்க்களமாகக் காண்பதில்லை. பகைவர்க்குப் பணியாத மன்னர் புலவர்க்குத் தணியக் காண்கிறோம். கண்ணிமைப்பதையும், போரில் முதுகிலே புண் படுதலையும் இழிவாகக் கருதும் பெருமிதப் பண்பு நமது வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. பதிற்றுப் பத்தும், புற நானூறும் எண்ணற்ற தமிழரசர்களையும் புலவர்களையும், காலத்தை வென்று நின்றுகொண்டே இன்றும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றன. அறவழியை வேலியாகக் கொண்டு அமைக்கப்பட்ட வாழ்வுப் பூஞ்சோலை போலப் பொலிவுடையது நமது வரலாறு. சிறு குழந்தைக்குக் கைப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/22&oldid=621367" இலிருந்து மீள்விக்கப்பட்டது