பக்கம்:மொழியின் வழியே.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - - . . 23

இவைகளைக் கொண்ட கணக்கு ஏடுகளாக அது இருந்து விடக் கூடாது. நம்முடைய தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் இன்றியமையாதது என்று விரும்புவார்களானால், தொ.மு. (தொல்காப்பியருக்கு முன்) தொ.பி. (தொல்காப்பியருக்குப் பின்) தி.மு. (திருவள்ளுவருக்கு முன் தி.பி. (திருவள்ளுவருக்குப் பின்) என்றெல்லாம் எழுதிப் பழைய அறிஞர்களுக்கும். பெருமை கொடுக்கலாமே? அதை விட்டுவிட்டு இந்திய வரலாற்றுக்கும் தமிழ் வரலாற்றுக்கும் தொடர்பு சிறிதுமற்ற வேறு இலச்சினைகளை இவர்கள் இடுவானேன்? இங்கே எவரையும் தவறுபடக்கூறவில்லை! இது பொருந்தவில்லையே? இவ்வாறு செய்தால் என்ன? என்ற அளவில்தான் மேற்கண்ட கருத்துக்களை எழுதியுள்ளதன் நோக்கம் அமையும். முடிவாக, - ஒழுக்கமும் அறவழியும் பண்பாடும் செறிந்து பழுத்த தமிழக வரலாறு அதனதன் நிலைக்கு இழிவு வராத முறையில் வாழ்க்கைக்கு வழி காட்டுந் துறையில் எழுதப்பட வேண்டும் என்பதே இக்கட்டுரை வேண்டுவது. 口

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/25&oldid=621370" இலிருந்து மீள்விக்கப்பட்டது