பக்கம்:மொழியின் வழியே.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மொழியும் போதனையும்

ஏன் கூடாது?

கல்லூரிகளில் தமிழைப் போதனா மொழி ஆக்குவது கூடுமா? கூடாதா கல்வித் துறையிலே பொறுப்பும் நெடு நாளைய அநுபவமும் ஆற்றலுங்கொண்ட பெருந்தகையாளர் பலர் இந்த வினாவைப் பொறுத்தமட்டில் மதில் மேற் பூனைகளாக ஒரு முடிவுக்கும் வர இயலாமல் மயங்கி நிற்கின்றனர். அவர்கள் ஏன் தமிழுக்கு ஏற்படும் இந்தத் தகுதியைக் கண்டு இவ்வாறு தயங்குகின்றனர் என்ற உள்துறைக் காரணம் புரியாமல் தமிழுக்காக ஏங்கி நிற்கும் நாமும் மயங்க வேண்டியிருக்கிறது. உண்மை என்ன தெரியுமா? ஒவ்வொருவருடைய மயக்கத்திற்கும் தயக்கத்திற்கும் அவர்களுடைய சொந்தக் காரணம் ஒன்று விலக்கவும் முடியாமல் வேண்டவும் முடியாமல் இருந்துகொண்டே தடை செய்கிறது. கட்டுண்டோம்; பொறுத்திருப்போம்; காலம் மாறும் என்று அமைந்தடங்கி நிற்கிறான் தமிழன். காலம் மாறாமல் இருந்துவிடப் போவதில்லை. ஆனால், கருத்து மாற வேண்டுமே. தம்மைச் சுற்றி ஏதோ ஒருவகையான எண்ணத் திரையை எழுப்பிக் கொண்டிருப்பவர்கள் தமிழுக்குத் தகுதி உண்டு என்பதை உணர முற்பட வேண்டும் அல்லவா? அவர்கள் உணராவிட்டால் உணர்த்த முற்படும் அவ்வள விலாவது நாம் சிறிது விழிப்படைய வேண்டாமா? எப்படி விழிப்படைவது? கூடாதுபோல் இருக்கிறதே! என்று சொன்னால், 'ஏன் கூடாது?’ என்று நமக்குத் தெளிவு ஏற்பட வேண்டும் என்பதற்காகவாவது நாம் கேட்டு வைக்கத் தயங்குவானேன்? இந்தக் குறைந்த அளவிலாவது நம்முடைய விழிப்பை வெளிப்படுத்தலாமன்றோ? கலைச் சொற்கள் .

'கல்லூரிகளில் தமிழ் மொழியில் பாட போதனை செய்யத் தொடங்குவதானால், அறிவியல் (Science), அரசியல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/26&oldid=621371" இலிருந்து மீள்விக்கப்பட்டது