பக்கம்:மொழியின் வழியே.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 27

நெருங்கிய தொடர்புகொண்டுதத்தம் கலைகளை நூல் வடிவில் உருவாக்குவதற்கு ஒன்றுகூடி முயற்சி செய்ய வேண்டும். எண்ணற்ற மேலை மொழி வல்லுநராகிய தமிழறிஞர்களின் உதவியும் இதற்கு இன்றியமையாதது. சென்னை, அண்ணா மலை, திருவனந்தை ஆகிய தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்கள் ஒன்றுபட்டு இதற்கான ஏற்பாடுகளைத் தம் பொறுப்பில் மேற்பார்த்துச் செய்ய வேண்டும். இந்த முயற்சிக்குப் பின்பு, தமிழில் இவ்வளவும் முடியும் என்று எதிர்பார்க்கவே இல்லையே' என்று ஆச்சரியம் அடையும் படியான விளைவுகள் நேரலாம். பல்லாயிரம் ஆண்டுகளாக ஒப்புயர்வற்ற சிறப்பும் பண்பட்ட இயல்பும் கொண்டு வாழ்ந்து வரும் தமிழ் மொழியில் ஆராய்ந்து முயன்று பார்க்காமல் ஒரு பெரிய தகுதியின்மையை உரைத்தால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாதல்லவா? உலகத் தொடர்பு முதலிய ஒதுக்க முடியாத அவசியங்களுக்காக ஆங்கிலத்தை ஏற்று மகிழும் பண்பு தமிழனுக்கு என்றைக்கும் குறையாமல் இருக்குமென்று நம்பலாம். எனவே, அதை எண்ணி யாரும் தயங்க வேண்டிய தில்லை. இன்னொரு காரணமும் அங்கே நினைக்கத்தக்கது. உயர்நிலைப் பள்ளிகளில் எங்கும் அறிவியல் முதலிய பொருள்களைத் தமிழிலேயே கற்பித்துவிட்டுக் கல்லூரிகளில் மட்டும் ஆங்கிலத்தில் தொடங்குவதால் மாணவர்கள் இடர்ப் படுகின்றனர். உயர்நிலைப் பள்ளிகளில் பழகிப் பழகித் தமிழுக்கு அறிவியல், நிலவியல் (Geography) முதலியவற்றைக் கற்பிக்கும் தகுதி இன்று இயற்கையாக ஏற்பட்டு விடவில்லையா? இதேபோலக் கல்லூரிகளிலும் முயன்றால் நாளடைவில் பழகிப்போகும். எனவே, தமிழுக்குத் தகுதியில்லையே என்று சொல்லிக் கல்லூரிகளில் தாய் மொழியில் போதிக்கத் தயங்குவது பொருத்தமான காரணமாகத் தோன்றவில்லை. ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுகின்ற கதைதான் இது. தமிழ் மொழியைப்போல எல்லாக் கலைகளுக்கும் இடங்கொடுக்கும் பரந்த இயல்புடைய மொழி மற்றொன்று காண்பதரிது. о

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/29&oldid=621374" இலிருந்து மீள்விக்கப்பட்டது