பக்கம்:மொழியின் வழியே.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மொழியின் வழியே!

மாற்றிக்கொள்ள விரும்பாவிடினும், இசைக் கலையின் தூய்மை யொன்றே குறிக்கோளாகக் கொண்டாவது இவைகளை மாற்றிக்கொண்டுதான் ஆகவேண்டும். இசை தெய்விகத் தன்மை பொருந்தியதொரு கடவுட்கலை என்பதை மறுப்பார் யாருமில்லை. அதன் தெய்வீகத் தன்மை இவைபோன்ற சில சில்லறைக் குற்றங்களால் பாதிக்கப்படுமாயின் அது மிக வருந்த வேண்டிய ஒன்றாகும். இதுபோலவே பழைய தமிழ் நூலுரைகளில் அரிதும் பெரிதுமாக அகப்படும் சில நல்ல கருத்துக்களை அவ்வக் கலைத்துறையிற் சிறந்தார் பலர் ஏற்றுப் போற்றி ஆராய்ந்து பயன்படுத்துவது அவசியம். இசை, நடனம், நாடகம் முதலியவைகளைக் கூறும் நூல்கள் தமிழில் இருந்திருக்கின்றன. நம் காலத்துக்கு முன் அவை கெட்டன போலும். அவைகளிலிருந்து கிடைக்கும் சில பல கருத்துக்களுக்கு இன்றும் பஞ்சமில்லை. ஆனால், அக்கருத்துக்களைத் தேடிக் காண முயல வேண்டும். п

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/34&oldid=621379" இலிருந்து மீள்விக்கப்பட்டது