பக்கம்:மொழியின் வழியே.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மொழியும் கவியும்

பாட்டின் குறிக்கோள்

பாட்டு, கவிதை என்றவுடன் பதவுரை, பொழிப்புரை என்று இப்படித்தான் நம்மவர் சிந்தனைகள் ஓடுகின்றன. உயர்ந்த நோக்கத்திற்குப் பயன்படும் சிறந்த கருவியாக அதனை எண்ணும் மனப் பண்பு பெரும்பாலோருக்கு ஏற்படாதது வருந்தத்தக்கதே. வாழ்க்கையை உயர்த்துவது சிந்தனை. சிந்தனையை வளப்படுத்துவது அறிவு. அறிவின் தரத்தை உயர்த்துவது பாட்டின் நோக்கமாக இருக்க வேண்டும். பொழுதைக் கழிப்பதன்று அதன் நோக்கம். அறியாமையை நீக்குவதும் அறிவை வளர்ப்பதும் ஒரே செயல்தான். விளக்கைக் கொண்டுவந்தால் இருட்டறையில் ஒளி பாய்கிறது. இருள் போகிறது என்றால் என்ன? 'ஒளி வருகிறது என்றால் என்ன? இரண்டும் சேர்ந்து குறிப்பது ஒரு பொருளைத்தானே. பாட்டு, மனிதனின் சிந்தனைகளை வரம்புக்குட்பட்ட அழகுடன் உருவாக்குகிற ஒரு நல்ல வடிவம். நினைவு என்பது வெறும் பூ நினைவின் முதிர்ச்சி சாதாரணப் பிஞ்சு. நினைவின் உறுதியான முடிவு காய். அது பாட்டாக வெளிப்பட்டால் கவிதைக்கனி. பூதான் பிஞ்சாகிறது. பிஞ்சுதான் காயாகிறது. காய்தான் கனியாகிறது. கள்ளிச் செடியும் எட்டியும் கூடத்தான் கணிகின்றன. ஆனால், பயன் என்ன? மனித உள்ளத்தில் ஏற்படுகின்ற பலவீனத்தை எந்த வகையிலாவது வெளியிட்டு விடுவதற்குப் பாட்டு என்று பெயர் இல்லை. ஒரு நல்ல பாட்டு ஒரு மனிதனை நல்லவனாக்கலாம், ஓராயிரம் மனிதர்களையும் நல்லவர்களாக்கலாம். ஒரு பெரிய சமுதாயத்தின் வாழ்க்கையையே நல்ல வழிக்கு மாற்றலாம். ஒரு பாட்டின் ஆற்றல் ஒன்பது பேரரசர்களின் செங்கோல்களை விட உயர்ந்தது. குப்பைத் Quom - 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/35&oldid=621380" இலிருந்து மீள்விக்கப்பட்டது