பக்கம்:மொழியின் வழியே.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மொழியின் வழியே!

மலையாகச் செவிச் செல்வம்தான் எனத் தெரிகிறது. அது மட்டுமன்று, அச்செல்வம் பிற செல்வங்களுள் எல்லாம் தலையாயது என்பதும் வெளிப்படுகிறது.

'செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை” - என்று இதை வள்ளுவனார் யாப்புறுத்துகின்றார். கேட்டுக் கேட்டுப் பழகிய பிறகுதான் மனிதன் சான்றாண்மை எய்த முடிகிறது. சால்பு என்றது அறிவால் நிறைவு எய்துகின்ற அமைதி நிலை. இந்த அமைதி நிலை நுணுக்கமான கேள்வி நிலையான செவிச் செல்வத்தாற் பண்பட்டவருக்கே எளிதின் எய்துகிறது. பிறருக்கு இது எய்துவது இயல்வதில்லை. இனிச் செவியால் நுகரப்படும் கேள்வியாகிய உணவிற்கும் வாயால் நுகரப்படும் சுவைகளாகிய உணவிற்கும் இடையே சில வியக்கத்தக்க இயைபுகளும் வேறுபாடுகளும் உண்டு. ஆழ்ந்த செவிச் செல்வமாகிய செவியுணவுடைய மக்களுக்குச் செவியுணவு துகர்ந்து வருங்கால் சுவையுணவில் மனமே செல்லுவதில்லை. பொதுவாக அறிவியற் செயல்களில் ஈடுபாடுடையவர்கட்கு வேலை நேரங்களில் பசி தோன்றுவதே தெரிவதில்லை.

மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவன் மூன்று நாளைக்கு உண்ணாமல் விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்ததாக வரலாற்றில் படித்திருக்கிறோம். எனக்குத் தெரிந்த தமிழ்ப் புலவரொருவர் காலை ஐந்து மணிக்குக் கம்ப ராமாயணத்தை விரித்துக்கொண்டு பாடத் தொடங்கினாரானால் பன்னிரண்டு மணி வரைக்கும் பசி தெரியாமல் கவிச் சுவை நுகர்ந்து கொண்டேயிருப்பார். மனம் ஒன்றில் ஈடுபடுகின்றபோது அதில் ஆழ்ந்து விடுமாயின் மற்றொன்றை நோக்கி எளிதில் திரும்புவதில்லை. இது மனவியல் நூலார் கண்ட முடிவு. இனி இயைபுகளாவன :- தாம் விரும்புகின்ற சுவையையோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/44&oldid=621389" இலிருந்து மீள்விக்கப்பட்டது