பக்கம்:மொழியின் வழியே.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மொழியின் வழியே!

இலக்கியங்களில் மரபுவழுக்கள் அமைத்துக் கொள்ளப் படுகின்றனவே என்றால் வழுமைதியால் ஒரு பெரும் பயன் ஏற்படும் நிலையிலேதான் அதுவும் பொருந்தும். சிறு குழந்தையின் காதுகளில் இரும்புக் கம்பியால் தட்டான், குழந்தை அழ அழக் குத்துவது வன்துயர் பயப்பதாக இருந்தாலும் அத்துளையில் பின்பு அழகான பொன்னணி ஒன்று அமைந்து காட்சிக்கு எழில் உண்டாகிவிடும்போது அந்தத் துயர் மறைந்து விடுகிறது. அதேபோல இலக்கிய ஆசிரியன் வழுப்புரிந்து மரபு தவறினால் அந்த வழுவுக்குக் காரணமாக அமைந்த பொருளாட்சி அதனினும் சிறந்த நயம் ஒன்றை அளிப்பதாக இருக்கவேண்டும். இவ்வாறு நயமளிக்காத நிலையில் மரபுவழு அமைத்துக் கொள்ளப் படுமானால் அது இலக்கிய ஆசிரியனின் சொந்த ஆற்றற் குறைபாட்டை நிர்ணயிக்கத் தகுந்த சான்றாக நிற்குமே அல்லாமல் வேறொன்றும் ஆகாது. சான்றாக ஒன்று காண்போம்.

'இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபேர் இரையான் கண்நோய்.” இத்திருக்குறளில் அஃறிணை உயிர்களின் உணவைக் குறிக்கும் 'இரை' என்ற சொல்லை உயர்திணையான் மேற்பொருத்திக் கூறியது திருவள்ளுவரின் மரபு வழுவே. ஆனாலும், இந்த வழுவை நாம் அமைத்துக் கொள்கிறோம். ஏன்? பசியறியாமல் மேலும் மேலும் உண்டு உடலைக் கெடுத்துக் கொள்ளும் அவனது அறியாமையை விளக்க ஏற்ற வார்த்தையாக நின்று விட்டது இரை என்ற சொல். அதுதான் காரணம். இனி அழகு அணி, இவை காரணமாகவும் வேறு பெயரால் இவைகள் அமைத்துக் கொள்ளப்படும்.

'பாயிருள் பருகிப் பகல்கான்

றெழுதரு பல் கதிர்ப் பரிதி'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/50&oldid=621395" இலிருந்து மீள்விக்கப்பட்டது