பக்கம்:மொழியின் வழியே.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மொழியின் வழியே!

வெளியிடும் அமைந்து அடங்கிய அறிவுத்திறன், சிறிதள வாவது சிலரிடம் கூடப் பெருகவில்லை. அடிப்படைக் காரணம் இவ்வளவினதே. அழகை உண்டாக்குவதற்காக உணர்ச்சிகளுக்கு உருவம் கொடுத்த நிலைமாறி, உணர்ச்சிகளை உருவாக்குவதற்காக அழகைப் படைக்க முயலுகின்ற வற்புறுத்தும் முறை நிகழ்கால இலக்கிய உலகில் மிக வேகமாக முன்னேறி வருகின்றது. எதையும், எப்படியும், எங்கும் சொல்லலாம் - சொல்ல முடியும் - சொன்னால் என்ன? என்று துணிந்தவர்கள் அந்த வழியை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள். மோட்டார் கம்பெனியில் அப்ரண்டிசாக ஒர்க் பண்ணுகிறான் ஸார் அவன். குட்ஃபெல்லோ லார் - என்று தாய்மொழிச் சொல்லேயின்றிப் பேசி மகிழச் சிறிதும் கூசாத காலம் இது. எழுத்திலும் சிலர் இந்த முறையினைச் சிறிது சிறிதாக, நுழைத்து வருகின்றனர். பாட்டும், உரையும், எழுத்தும், பேச்சும், எல்லாமே இலக்கியத் தொடர்புடையவை தாம். அவற்றில் எங்கே பிழை புரிந்தாலும் மரபு சிதையத் தான் சிதையும். மரபின் சிதைவு மொழியையும் சிதைக்கத் தொடங்காது என்பது என்ன உறுதியாகப் போயிற்று?

மரபைக் காப்பாற்றுக

காலம், விலக்க முடியாத அளவிற்கு இரண்டொரு மரபுத் தவறுகளையும் நமக்கு உண்டாக்கிக் கொடுத்துவிட்டது. 'எனது நண்பர் - அவர் எங்கள் சங்கத்து விழாவில் பங்கெடுத்துக் கொண்டார்; இவைகள் மரபுப் பிழைகள் என்று சொன்னால் இந்தக் காலத்தில் யாராவது ஒப்புக்கொள்வார்களா? காலத்துக்கு ஓரளவு வளைந்து கொடுத்துப் பொறுக்கும் இயல்பு மரபுக்கு ஒர் அளவு இருப்பதனால் சில வழக்குகளும் காலகதியில் அமைந்து பொருந்திவிடுகின்றன. அப்படிப் பொருந்தி அமைந்த பின்னர் அவற்றைப் பிழையென்று உணரும் உணர்ச்சியே பலருக்கு ஏற்படுவதில்லை. எனது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/52&oldid=621397" இலிருந்து மீள்விக்கப்பட்டது