பக்கம்:மொழியின் வழியே.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மொழியின் வழியே!

அளவுக்கு அப்பாற்பட்ட தேவைதான் எதுவரினும் கலங்கிக் கையறவுபட்டுச்சோர்ந்து விடாத மனம் ஒன்றுதான் மனிதனின் அழியாத தேவை. இன்பம் வரினும் துன்பம் வரினும் விளைவற்ற பொறுமை உள்ளம் கொண்டு அறம் ஒன்றையே நம்பி வாழ முற்படுகிறவனுக்கு என்றும் கவலை அவலங்கள் இல்லை. இன்பத்திலோ துன்பத்திலோ உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு அழுந்தி விடுவோர்தாம் கலங்கவேண்டிய நிை ஏற்படுகின்றது. -

'எந்தப் பொருளின் மேலும் அளவுக்கதிகமான பற்று வைத்துவிடாதே! அப்புறம் அந்தப் பொருளின் இழப்பிலோ, அழிவிலோ நீ வைத்த பற்றினால் அந்தப் பற்றினும் பன் மடங்கு துன்பப்பட வேண்டி நேரிடும். ஆகவே, தண்ணிரில் எண்ணெய் போலவும் தாமரை இலை மேல் தண்ணிரே போலவும் மண்ணில் எழுந்து மண் படாமல் பூக்கும் தாமரை மலர் போலவும் வாழ்வில் ஒட்டியும் ஒட்டாததுபோல் வாழ்க' - என்ற அறிவுரை என் நினைவில் படர்ந்தது. இந்த அறிவுரையையொட்டி,

"மெய்த் திருப்பதம் மேவு என்ற போதினும் இத்திருத்துறந்து ஏகு என்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை ஒத்திருக்கும் முகத்தினை...' -

- (காட்சிப் படலம்) என்ற கம்பனின் பாட்டும் என் சிந்தனையில் தோன்றியது. 'இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' (54: 9) என்ற அரசியல் திருக்குறளும் நினைவின் விளிம்பிலே வந்து நின்றது. அரசியலுக்கு அது சரிதான் பொதுவாழ்வுக்கு...? இந்தக் கேள்வி என் சிந்தனையை மறுபடியும் தடம்புரளச் செய்தது. தடம் புரண்டு கிளர்ந்த இந்த புதுச் சிந்தனையில் வேறொரு புதிய உண்மையும் புலனாயிற்று வெறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/62&oldid=621407" இலிருந்து மீள்விக்கப்பட்டது