பக்கம்:மொழியின் வழியே.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 61

கெண்டைமீன் அகப்பட்டால் போதும் என்று இட்டதுண்டிற் கொக்கியில் ஆயிரக்கணக்கில் விலைபோகும் முத்துச்சிப்பியே தொத்திக்கொண்டு வந்ததுபோலாயிற்று, என் சிந்தனையின் விளைவு. துறவற்ற வாழ்வு, அரசியல் வாழ்வு, தனி மனிதனின் சமூக வாழ்வு, ஆகிய இம்மூன்று வேறுபட்ட வாழ்வுகட்கும் தேவையைச் சுருக்கிக்கொண்டு வாழும், வேண்டாமை என்னும் விழுச்செல்வம், ஒரு குறிப்பிட்ட விகித ஒழுங்குப்படி வேண்டியிருக்கிறது. டால்ஸ்டாயும், காந்தியடிகளும் துறவு, அரசியல், சமூகம் என்று பகுத்து நோக்காமல் மொத்தமாகத் தேவை சுருங்கித் தந்நலம் குன்றினால் ஒழியச் சமூக வாழ்விலுள்ள போட்டி, பொறாமை பூசல்களும் ஊழல்களும் நீங்க வழியில்லை என்று பொதுவிற் கூறிச் சென்றார்கள். ஆனால் சிந்தனை வளமும் அறிவுத் திறனும் மிக்க நம்முடைய தமிழ்நாட்டுத் திருவள்ளுவரோ, இந்த வேண்டாமை என்னும் விழுச் செல்வம் அரசியல் வாழ்வுக்கு எவ்வளவு தேவை? பொது வாழ்விற்கு எவ்வளவு தேவை என்று மூன்று வேறு இடங்களில் மூன்று வேறு விதமாகப் பிரித்து விகிதப்படுத்திக் கூறியிருக்கின்றார். துறவிக்கும், அரசியலாளர்க்கும் பற்றற்ற நிலை, விருப்பு, வெறுப்பில்லாமை ஆகிய இந்தப் பண்புகள் சமஅளவில் தேவை. சமூக வாழ்வில் ஈடுபட்டுள்ள தனி மனிதனுக்கு இவ்வளவு தேவையை இந்தப் பண்புகள் பெற முடியாவிடினும், பிறரைத் துன்புறுத்தாமலும், பிறரால் நாம் துன்புறுத்தப்படாமலும் வாழ்கின்ற அவ்வளவிற்காவது அவசியமானவையே. .

திடுமென்று மேசையிலிருந்து ஏதோ கீழே உருண்டு விழுந்து உடைந்த ஒலி என் சிந்தனையைக் கலைத்தது. திடுக்கிட்டவனாக நாற்காலியினின்று எழுந்து மேசைக்கடியில் குனிந்து பார்த்தேன். ஏறக்குறைய ஐம்பதுவெண் பொற்காசுகள் பெறுமானமுள்ள என்னுடைய பார்க்கர் எழுதுகோல் (Parker Pen) மேசையிலிருந்து கீழே விழுந்து உடைந்திருந்தது. பல ஆண்டுகளாக நான் பயன்படுத்திவந்த எழுதுகோல் அது மூடி விளிம்புகளில் பொன்வளையங்கள் இட்டுக் காண அழகாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/63&oldid=621408" இலிருந்து மீள்விக்கப்பட்டது