பக்கம்:மொழியின் வழியே.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 67

இணைந்த காதலர்’ என்றவாறு ஒருமை பெற்ற காதல ரிருவருக்குமுள்ள தொடர்பை விளங்கக் கூறி விவரிக்க வேண்டிய இடத்தில் உடம்பும் உயிரும் ஒன்றோடொன்று இணைந்து பிணைந்துள்ள இயைபை உணர்த்தி அதுபோன்ற இயைபைக் காதலுக்கும் கற்பிப்பது அந்த இரண்டாவது 5ø...@} # ĝò {f}, - .

'உடம்போ டுயிரிடை யென்ன மற்றன்ன மடைந்தையோ டெம்மிடை நட்பு."

- - (காதற் சிறப்பு - 2) இது காமத்துப்பாலில் களவியலில் "காதற் சிறப்புரைத்தல்' என்னும் அதிகாரத்திலுள்ள ஒரு குறள். 'உடம்பும் உயிரும் தம்முள் இரண்டறக் கலந்து ஒருருவாய் இயைந்தாற் போன்றது மடந்தைக்கும் எமக்கும் இடையே உள்ள தட்பு. அது பிரிக்க முடியாது இணைந்த ஒருமைப்பாடு உடையது' என்பது இக்குறளாற் போந்த கருத்து. உடம்பிற்கும் உயிர்க்கும் உள்ள இயைபு மாத்திரமே இங்கே உவமை. - - - 'யாக்கைக்கு உயிர் இயைந்தன்ன நட்பு. 'இருதலைப் புள்ளின் ஒருயிரம்மே என்று அகநானூறு இக்கருத்தை விவரிக்கும். அவள் வேறு, தான் வேறு என்று வேறுபடாது இயைந்துள்ள காதலுணர்ச்சியின் ஒருமையை நட்பென்று கூறினான் தலைவன். இங்கே உவமை, 'உடம்போடு உயிர்க் குள்ள இயைபு. பொருள் மடந்தைக்கும் அவனுக்குமுள்ள உணர்ச்சி ஒருமை. இவ்விரண்டு குறள்களிலும் வந்துள்ள இரண்டு உவமைகளையும் இவ்வாறு பகுத்து உண்மை நயத்தைக் காணவில்லையாயின் வள்ளுவர் செய்தது தவறு என்றே நினைக்கத் தோன்றும், முதற் குறளிற் பயின்றுள்ள 'நட்பு என்ற சொல்லுக்குத் தொடர்பு - உறவு என்றே பொருள் கொண்டால் போதும். இரண்டாங் குறளில் கண்ட நட்பு என்ற சொல்லுக்கு உணர்ச்சி ஒருமை காதல் என்பன போலப் போந்த பொருள் கொள்ளுவதே உவமையைச் சிறப்பிக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/69&oldid=621414" இலிருந்து மீள்விக்கப்பட்டது