பக்கம்:மொழியின் வழியே.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மொழியின் வழியே!

கடலில் மழுவை எறிந்து, குமரி முதல் கோகர்ணம் வரையுள்ள பகுதிகளை உண்டாக்கி, அந்தணர்களுக்கு தானம் செய்தார் என்பதே மேற்படி அபிப்ராயம். ஆகையால்தான் பரசுராம தேசம் என்ற பெயர் கேரளத்துக்கு வழங்குகிறதென்பர். கேரளத்தின் மொழியாகிய மலையாள மொழி பற்றி இந்நூல்கள் விரிவாக எதுவும் கூறவில்லை. மலையாள மொழி அமைப்பில் தமிழைத் தாயாகக் கொண்டிருந்தாலும் ஒலிக்கின்ற விதத்தில் சம்ஸ்கிருதச் சாயலைப் பெற்றிருக் கின்றது. தமிழிலிருந்து உண்டாகிய் கிளை மொழிகள் யாவற்றிலும் தமிழுக்கு மிகமிக நெருக்கமான உறவு உடையது மலையாளமே என்பது கால்டுவெல் கருத்து.

மேற்குக்கரைப் பிரதேசங்களில் வடக்கே மங்களுர் தொடங்கித் தெற்கே திருவனந்தபுரம் வரை மலையாள மொழி பேசும் மக்கள் பரவலாக வாழ்கின்றனர். மலையாள மொழியில் பெருவாரியான தமிழ்ச் சொற்கள் தமிழுருவம் பெறாமலும் மாறியும் கலந்து வழங்குகின்றன. ஆரிய மொழிக்கும் திராவிட மொழிகளுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி ஆராய்ந்துள்ள டாக்டர் எல்.ஏ. ரவிவர்மா என்ற மலையாள ஆராய்ச்சியாளர் தமிழுக்கும் மலையாளத்துக்கும் உள்ள நெருங்கிய உறவைக் கூறியுள்ளார். திருவனந்தபுரத்திற்குத் தெற்கே தமிழும் மங்களுருக்கு வடக்கே கன்னடமும் மலையாள மொழியோடு கலந்து விடுகின்றன. 'கேரள மொழி', 'கேரளர் என்ற பெயர்கள் மலையாளத்திற்கும், மலையாளிகளுக்கும் இட்டு வழங்கப்படுகின்றன. பிளினி தமது யாத்திரை நூலில் 'கேரள புத்திரர்கள் (கெரா புத்ராஸ்) என்று இவர்களைக் குறிப்பிடுகின்றார். தொடக்கக் காலத்தில் தமிழிலிருந்து தோன்றித் தமிழோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த மலையாள மொழி, பிற்காலத்தில் அதே உறவைச் சம்ஸ்கிருதத்தோடு கொண்டு இணைந்தது. இதனால் எண்ணற்ற வடமொழி வழக்குகளும் சொற்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/74&oldid=621419" இலிருந்து மீள்விக்கப்பட்டது