பக்கம்:மொழியின் வழியே.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. மொழியும் சிறுகதைகளும்

கதை பிறக்கும் கதை

கதைகளைப் படிக்க வேண்டுமென்ற ஆர்வமும் கதைகளை எழுத வேண்டுமென்ற முனைப்பும் ஒத்த அளவில் வளர்ந்து வருகிற காலம் இது! தமிழ் மறுமலர்ச்சி இலக்கியத்தின் நல்ல காலம்; இதை நாம் பெருமிதத்தோடு சொல்லிக்கொள்ளத் தயங்க வேண்டியதில்லை.

மனித சமுதாயத்தில் கதைகள் எப்படி உண்டாயின? கதைகளை எழுதுகிறவர்களும் படிக்கிறவர்களும் எப்படித் தோன்றினர்? ஒயா வாழ்க்கைப் போரில் பிறந்த நாள் தொட்டு ஒழியாது முனைந்து கிடக்கும் மனித இனம் கதைகளில் இன்பம் காணத் தொடங்கிய காலம் எது?

சுவை நிறைந்த இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டால் கதையின் கதை ஓரளவு தெளிவாகப் புரிந்துவிடும். வாழ்வின் இன்பத் துன்பங்களையும் ஏற்ற தாழ்வுகளையும் குறைவு நிறைவுகளையும் அதில் இருந்துகொண்டே அதனின்றும் நினைப்பில் விலகி நின்று கலை நோக்குடன் பார்க்கும் ஆசை முதன் முதலாக மனித இனத்திற்கு என்று ஏற்பட்டதோ அன்றே கதைகளை உருவாக்கும் ஆசையும் படிக்கும் ஆசையும் ஏற்பட்டிருக்க வேண்டும்.

நம்மைப் புகைப்படம் எடுத்துப் பார்க்க வேண்டுமென்ற ஆசை, நம்மைப் பிறர் புகழ வேண்டும் என்ற ஆசை (சில சமயங்களில் பிறர் செய்யும் புகழ்ச்சியை நாமே செய்து கொள்ளுதலும் உட்பட) நம்முடைய நிழலைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை - நமக்கு ஏற்படவில்லையா? கதை இலக்கியம் படைக்கப்பட்டதும், இது போன்றதோர்.அவாவின் விளைவுதான் என்று கருதலாம்.

வாழ்க்கையில் மலிந்து கிடக்கும் உயர்வு தாழ்வான குணங்களையும் வியப்பு விந்தை கலந்த நிகழ்ச்சிகளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/84&oldid=621428" இலிருந்து மீள்விக்கப்பட்டது