பக்கம்:மொழியின் வழியே.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 83

சாதாரண அசாதாரணச் சம்பவங்களையும் கலைக்கண்ணாலே காணும் நளினமான விருப்பம் இந்தத் தலைமுறையில் அளவு கடந்து வளர்ந்திருக்கிறது. வாழ்க்கையே வளர்ந்திருக்கும் போது கலைகள் மட்டும் வளராமலிருக்க முடியுமா? சிறுகதை, நாடகம், நாவல், திரைப்படம் ஆகிய பல துறைகளிலிருந்தும் கதைக்கு மதிப்புப் பிறந்ததே இந்தக் கலைக் கண்ணோட்டத்தின் காரணமாகத்தான். - புதிய சிறுகதை

பஞ்ச தந்திரக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் இன்னும் பழைய தலைமுறையைச் சேர்ந்த எண்ணற்ற நீதிக் கதைகள், ஆகியவற்றையும் சிறுகதைகளென்று கூறலாம். ஆனால், உண்மையில் கால் நூற்றாண்டுக் காலத்திற்குள்ளாகத் தமிழில் புதிய முறையில் வளர்ந்திருக்கும் சிறு கதை இலக்கியத்தை ஈடு இணையற்ற வளர்ச்சி என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். புறநானூற்றிலும், சங்க நூல்களில் மிகுந்திருக்கும் அகத்துறை பாடல்களிலும், பிற்காலத்துப் புலவர்கள் தத்தம் அநுபவங்களைக் கூறிப் பாடிய தனிப் பாடல்களிலும், சிறு கதையின் சாயல் இருக்கிறது. ஆனால் அவைகளே முழுமையான சிறுகதைகள் ஆக இயலாது. ஒரு உணர்ச்சியை, ஒரு நிகழ்ச்சியை உருக்கமாக விவரித்துப் பொருத்தமாகக் காட்டுவதுதான் சிறு கதை என்றால் சங்கப் பாடல்கள் பலவும் (Lyrics) பிற்காலத் தனிப்பாடல்கள் பலவும் (Ballads) சிறு கதை அமைப்பு மட்டுமாவது உடையவைதாம்.

இருந்தாலும் இன்று மக்களிடையே பேரும் புகழும் பெற்று நிலவும் உரைநடைச் சிறு கதைகள் ஆங்கில மரபு பற்றிய சார்புடையவை. பழைய காலத்தில் செய்யுள் இலக்கியத்திற்கு எவ்வளவு மதிப்பு இருந்ததோ அவ்வளவு மதிப்பும் தகுதியும் உரைநடை இலக்கியம் இன்று பெற்றிருக்கிறது. எதையும், எப்படியும், எவ்வளவு தெளிவாக வேண்டுமாயினும், உரைநடையில் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை எழுதுகிறவர்களுக்கும், படித்துத் தெரிந்துகொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/85&oldid=621429" இலிருந்து மீள்விக்கப்பட்டது