பக்கம்:மொழியின் வழியே.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 85

இன்றைக்கு எழுதுகிறவர்களில் இரண்டு வகை. எப்படி எழுதினாலும் சரி; அது படிக்கிறவர்களைத் திருப்திப் படுத்துவதாக இருந்தால் மட்டும் போதுமானது என்று எண்ணுகிறவர்கள் ஒருவகை. முடிந்தால் தரமுள்ள, உரமுள்ள, பண்பாட்டோடு கூடிய சிறு கதைகளை எழுதவேண்டும். இல்லாவிட்டால் எழுதாமலிருப்பதே நல்லது - என்றெண்ணும் பொறுப்புள்ள கதாசிரியர்கள் மற்றொரு வகை. இந்த இரண்டு வகையில் முன்வகையைச் சேர்ந்தவர்கள் செல்வம், செல்வாக்கு இரு துறையிலும் உடனடியாக வளர்ச்சி பெற்று வருகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. -

மக்களை உருவாக்க வேண்டிய எழுத்தாளர்கள், சமூகத்தின் நேர்மையான வளர்ச்சிக்குக் காரணமானவர்களாக இருக்க வேண்டும். குற்றவாளிக்கு விடுதலை பெறவேண்டும் என்ற விருப்பம் இருந்தால் மட்டும் சட்டமோ, நீதியோ அவனை மன்னிக்க முடியாது. சட்டத்துக்கும் நீதிக்கும் எவ்வளவு பொறுப்பு உண்டோ அவ்வளவு பொறுப்பு எழுத்தாளர்களுக்கும் உண்டு.

நீங்கள் எழுதும் சிறு கதையால் எத்தனை மக்களைக் கவரலாம்? என்று எண்ணிப் பார்த்து மதிப்பிடாதீர்கள். எத்தனை மக்கள் திருந்துவர்? எத்தனை பேருடைய உள்ளத்துக்கு உண்மையைப் புரிய வைக்கலாம் ? என்று இப்படியும் தெரிந்து மதிப்பீடு செய்யுங்கள். அறத்தையும், நேர்மையையும் வற்புறுத்தத் தவறிய எத்துறையும் கலை யென்ற பெயரில் நிலைத்ததில்லை. தமிழ்நாட்டின் வாழ்வில் தான் எத்தனை குழப்பங்கள்? இந்தத் துன்பம் நிறைந்த சூழ்நிலையில் பொழுது போக்குவதற்காக மட்டும் எழுதிக் கொண்டிருக்கலாமா? மக்களைச் சிந்திக்கச் செய்யும் சிறு கதைகள்தான் இன்றையத் தேவை!

எழுத்தாளர் பொறுப்பு

ஆகவே, தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களுக்கு ஒரு வார்த்தை காரில் ஏறப்போகிற அவசரத்தில் பணப் பையைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/87&oldid=621431" இலிருந்து மீள்விக்கப்பட்டது