பக்கம்:மொழியின் வழியே.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 89

வளர்ச்சியின் திறவுகோல்

அதிக வளர்ச்சியை முன் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் தான் குறைந்த வளர்ச்சியின் அடிப்படைக் குறைபாடுகள் தெரிய முடியும் என்பவர்களின் கூற்றை முற்றும் மறுப்பதற் கில்லை. பிறநாட்டு நிலை என்ற அளவு கோலால் அளந்து உண்மையை மறைக்காமல் கூறினால் தமிழில் சிறுகதைத் துறை வளர்ந்துள்ள அளவு நாவல்துறை இன்னும் வளர வில்லை என்கிறார்கள். இப்போது வளர்வதற்குத் தொடங்கி யிருக்கிறது; இனி மேல் வளரும் என்று நம்புவதற்கு நிறைய இடம் இருக்கிறது அல்லவா?

தமிழில் இப்போதுள்ள நிலையில் எல்லாவகையிலும் சிறந்த நாவல்கள் என்று சொல்லத் தக்கவற்றை விரைவாக எண்ணிவிடலாம். -

இந்திய மொழிகளில் ஈடும் எடுப்பும் சொல்ல முடியாத மிகச் சிறந்த முறையில் நாவல் இலக்கியத்தை வளர்த்திருக்கும் மொழி வங்க மொழி. கீழை நாட்டு நாவல் இலக்கியத்தின் தந்தையர் என்று புகழத்தக்க மாபெரும் நாவலாசிரி யர்களெல்லாம் வங்க மொழிக்கு உரியவர்கள்.

மராத்தி, இந்தி ஆகிய மற்ற வடநாட்டு மொழிகளும் வங்க மொழி ஆசிரியர்களின் வழியைப் பின்பற்றி அரும் பெரும் நாவல்களை அளித்துள்ளன. ஆனால் வட இந்திய மொழிகளில் சிறுகதை அவ்வளவு வளர்ச்சி பெறவில்லை என்கிறார்கள். தமிழிலோ சிறுகதை இலக்கியம் அதிசயப்படத் தக்க வளர்ச்சியடைந்திருக்கிறது. அவ்வளவு வளர்ச்சியை நாவல்துறை இன்னும் அடையவில்லை.

இப்படி வளராமைக்குப் பலவிதமான காரணங்களைக் கூறலாம். தமிழில் நன்றாகக் கதை எழுதும் சக்தி உள்ள வர்களெல்லாம் பெரும்பாலும் வேறு தொழில்களில் இருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/91&oldid=621435" இலிருந்து மீள்விக்கப்பட்டது