பக்கம்:மொழியின் வழியே.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 9 |

குறைவில்லாமல் எதிர்பார்க்கலாம். இதைத்தான் எல்லோரும் நிறையப் படிக்கிறார்கள். இப்படித்தான் எழுத்தாளர்களும் எழுதுகிறார்கள். இப்படி எழுதினால்தான் வாசகர்களுக்குப் பிடிக்கிறது என்று பலர் சொல்லக் கேட்கிறோம். வளர்ச்சியின் அளவுகோல் இது அன்று. உலகத்துச் சிறந்த நாவல்களோடு ஒப்பிட்டுப் பார்த்துச் சிறந்தன என்று சொல்லப்படுவதற்கு என்னென்ன தகுதிகள் உண்டோ அவற்றைக் கொண்டு நமது வளர்ச்சியை அளக்கவேண்டும் என்பவர்கள் அந்த அளவு தான் உண்மையான அளவு என்கிறார்கள். ஆக்கபூர்வமான நோக்கத்தோடு கூறினால் இதை ஒப்புக்கொள்வதற்கும் இடமிருக்கிறது. ஆனால், இன்றைய விமர்சகர்கள் உலகத்துச் சிறந்த நாவல்களைப் பலிக்களமாக வைத்துத் தமிழ் நாவல்களை அந்தக் களத்திலே காவு கொடுத்து மகிழ்கிறார்கள். ஆக்கத்துக்கு வழிகோலும் பயனுள்ள அளவையே இங்கு அளவு என்று நான் குறிக்கிறேன். -

வளர்ந்த வழி

தமிழ் நாவல் பிறந்த காலத்தை, வேதநாயகம் பிள்ளை, பாரதியார், ராஜமையர், மாதவையா, இவர்கள் காலத்திலிருந்து படிப்படியாகக் கூறுகிறார்கள். இவை எல்லாம், ஏறக் குறைய நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட வளர்ச்சிதான். பத்தே வருடங்களில் தமிழ்ச் சிறு கதைகளுக்குக் கிடைத்திருக்கின்ற வளர்ச்சி அதைவிட அதிகமான வருடங்களாகியும் நாவலுக்குக் கிடைக்கவில்லையே என்று வருந்தத்தான் வேண்டியிருக்கிறது.

வேதநாயகம் பிள்ளையின் பிரதாபமுதலியார் சரித்திரம் தான் தமிழில் தோன்றிய முதல் நாவல். பழைய காலத் தமிழ் நடையில் அமைந்தது. பாரதியார் எழுத முயன்று எழுதிய 'சந்திரிகையின் கதை என்ற நாவலில் அமைப்பு நன்றாக இருந்தாலும் முற்றுப் பெறாமல் அரைகுறையாக நின்று விட்டது. விகர் ஆஃப் வேக்பீல்டு என்ற ஆங்கில நாவலைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/93&oldid=621437" இலிருந்து மீள்விக்கப்பட்டது