பக்கம்:மொழியின் வழியே.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மொழியின் வழியே!

படித்த ஆர்வத்தால் எழுந்த தமிழ் நாவலே பி.ஆர்.ராஜமையரின் 'கமலாம்பாள் சரித்திரம். இது சற்றே பண்பட்ட அமைப்போடு கூடியதென்றே புதிய நாவல்களைப் புழைய காலத்தில் வந்திருக்க வேண்டியது - என்று குறை கூறும் பழைய விமரிசகர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு அடுத்தபடி கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ்ப் பணிபுரிந்த பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள் ஆகிய தமிழ்ப் பேராசிரியர்கள் தூய தமிழ் நடையில் சிலவற்றை எழுதினர்; மேலே கூறிய தொடக்க காலத்து நாவல்களில் அதிகப் புகழையும் அதிக வாசகர்களையும் சம்பாதித்துக் கொண்டதும் கமலாம்பாள் சரித்திரம் தான் என்கிறார்கள். மாதவையாவின் நாவல்களும் இந்த நிலையே பெற்றன.

இதன்பின்துப்பறியும் நாவல்கள்- பயங்கர நாவல்களின் சகாப்தம் ஆரம்பமாயிற்று. ரெயினால்ட்ஸ், டுமாஸ் ஸ்காட் முதலிய மேனாட்டு நாவலாசிரியர்களின் பாணியைப் பின் பற்றி ஜே.ஆர்.ரங்கராஜு, வடுவூரார், ஆரணியார் ஆகியோர் எழுதத் தொடங்கினர். இராஜாம்பாள், சந்திரகாந்தா, கிருஷ்ணா சிங் முதலியவைகளை இந்த வகை நாவல்களாகக் குறிப் பிடலாம். வடுவூராரும், ஆரணியாரும் இத்தகைய நாவல்களை ஏராளமாக எழுதிக் குவித்துள்ளனர். பலரைக் கவர்ந்த சிறப்பும் அக்காலத்தில் இவற்றுக்கு உண்டு என்கிறார்கள். ரங்கராஜுவின் 'இராஜாம்பாள் நாவலுக்கு அந்தக் காலத்தில் இருந்த மவுஸ்" சொல்லி முடியாது. இந்த வகை நாவல்களாலும் தமிழுக்குச் சில ஆயிரம் வாசகர்கள் உண்டாயினார்கள் போலும்.

புதிய திருப்பம்

இந்தப் பயங்கர நாவல்களின் சகாப்தத்திற்குப் பிறகு தமிழ் நாவல் இலக்கியத்தில் மூன்றாவதாக ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. துப்பாக்கியும், துப்பறிவும், இல்லாமல் சமூகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/94&oldid=621438" இலிருந்து மீள்விக்கப்பட்டது