பக்கம்:மொழியின் வழியே.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 93

பிரச்சினை, அதில் சீர்திருத்த நோக்கம் ஆகியவற்றைக் கொண்டும் நாவல்கள் எழுதலாம் என்ற நம்பிக்கையோடு சில எழுத்தாளர்கள் தோன்றினர். நாரண துரைக்கண்ணன் (ஜீவா), வை.மு.கோதைநாயகி அம்மாள், லகதிமி ஆகியவர்களும், கல்கியும் தமிழ் நாவல்கள் எழுதினர். வை.மு.கோ. எழுதிய நாவல்களின் தொகை அதிகம். பொழுது போக்குக்காக ஆண்களும், சாதாரணமாகப் பெண்களும் அவற்றை விரும்பிப் படித்தனர். உயர்ந்த உண்மைகளையும் உத்திகளையும் நாவலுக்காக அடைகிற இலக்கிய வீரம் இந்தக் காலத்தில் மெல்லத் தளிர்க்கப் பார்த்தது.

கல்கி வந்தார். நாவலுக்குத் தொடர்கதை என்ற பெயரும் இக்காலத்தில் உண்டாயிற்று. தேசிய இயக்கத்துக்கும் நாவல் மூலம் பிரச்சாரமளித்தவர் கல்கி. தியாக பூமி, கள்வனின் காதலி, ஆகிய அவருடைய தொடக்க கால நாவல்கள் தமிழ் வாசகர்களைப் புதிய அழகான பண்பட்ட பாதைக்கு அழைத்துக் கொண்டு வந்து சேர்த்தன. தரமுள்ள நல்ல வாசகர்கள் பலரைக் கவர்ந்தார் கல்கி.

கோதைத் தீவு, சுந்தரி, விஜயம், முதலிய துணிவான சமூக சீர்திருத்த நாவல்களை வ.ரா. எழுதின சமயமும் இதுவே. வக்கீல் தொழில், மேல்நாட்டுப் படிப்பு, போலி நாகரிகம் - இவற்றைக் கிண்டல் செய்து எஸ்.வி.வி. நாவல்கள் எழுதினார். சங்கரராம் நாவல்களும் இரண்டொன்று தொடர்கதைகளாக வெளிவந்தன. - -

இந்தச் சமயத்திலும் வங்காளம், மராத்தி, இந்தி ஆகிய பிற இந்திய மொழிகளில் வளர்ந்துள்ள அளவு தமிழ் நாவல் இலக்கியம் வளரவில்லை. வளர்ச்சிக்கு அடியெடுத்து வைத்தது.

1930-வது ஆண்டுக்குப் பின்புதான் தமிழ் நாவலுக்கு இலக்கிய மதிப்பும், தனித் தன்மையும், ஓரளவு ஏற்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/95&oldid=621439" இலிருந்து மீள்விக்கப்பட்டது