பக்கம்:மொழியின் வழியே.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மொழியின் வழியே

மாத, வார இதழ்களும் நாவல்களுக்கும் தொடர்கதைகளுக்கும் முக்கியத்துவமளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. வாசகர்களும் வளர்ந்து பெருகினார்கள்.

கல்கி விகடனிலிருந்து விலகித் தனியே கல்கியை ஆரம்பித்தபோது சரித்திரம், சமூகம், ஆகிய இரு துறைகளிலும் மகோந்நதமான நாவல்களை எழுதத் தொடங்கினார். அப்போது புதிய விழிப்பு ஏற்படவும் ஒரு வாய்ப்பு நேர்ந்தது. தாகூர், சரத்சந்திரர், பிரேம்சந்த், பங்கிம்சந்திரர், காண்டேகர் முதலிய மிகச் சிறந்த வடநாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் தமிழில் மொழி பெயர்க்கப் பெற்று வெளி வரலாயின. அதன் பயனாக எழுதுகிறவர்களிடம் அம்மாதிரி எழுதவேண்டும் என்ற ஆசையும், படிக்கிறவர்களிடம் அத்தகைய தரமுள்ள நாவல்கள் படிக்கக் கிடைக்க வேண்டுமே என்ற ஆர்வமும் உண்டாயிற்று. இந்த ஆர்வம்தான் வளர்ச்சியின் முதல் தளிர் கல்கி வெளியேறிய பின் தேவன் - ஆனந்த விகடனில் நாவல் - தொடர்கதைகள் எழுதி வரலானார்.

தமிழ் நாவலின் முதல் தளிர், தளிர்த்த இந்த நல்ல நேரத்தில் கலைமகளில் 'நாராயணசாமி ஐயர் நாவல் போட்டி" ஏற்பட்டது. - நாவல் - தொடர்கதைத் துறைகளில், அந்நாளில் பெயர் பெற்றிருந்த சிறுகதை ஆசிரியர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. 'சிற்றன்னை என்ற சிறிய நாவலை மட்டும் புதுமைப்பித்தன் எழுதினார். அது ஒரு பெரிய நாவல் ஆகவில்லையானாலும் அமைந்திருக்கும் அளவில் பார்த்தால் மிகச் சிறப்பாகவே இருக்கிறது. பெருகிய ஆர்வம் -

கலைமகளில் நாவல் போட்டி ஏற்பட்ட பின்பு தமிழில் ஒருசில நல்ல நாவலாசிரியர்களாவது தோன்றியிருக்கிறார்கள். 1940இல் இருந்து 1961 வரையுள்ள இருபத்தொரு வருடங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/96&oldid=621440" இலிருந்து மீள்விக்கப்பட்டது