பக்கம்:மொழியின் வழியே.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 97

பங்கிம்சந்திரர், பிரேம்சந்த், சரத்சந்திரர், தாகூர், காண்டேகர், சோபான், சியாராமசரன் குப்தா, தகழி, சுதர்சன் - போன்று மற்ற இந்திய மொழிகளில் தோன்றியுள்ளவர்களை ஒத்த நாவலாசிரியர்களைத் தமிழ் நாட்டில், உண்டாக்குவது படிப்பும் பண்பும், உள்ள வாசகர்களாகிய உங்கள் கையில்தான் இருக்கிறதென்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தரமுள்ள நாவல்களை உருவாக்கத் தரம் தெரிந்த ஒவ்வொரு தமிழ் வாசகர்களும் பாடுபடுங்கள். தமிழ்ப் பண்பாடும், மரபும் இழுக்குறுமாறு எழுதப்படுகிற மட்டரக நாவல்கள் எவற்றிற் காவது நாம் அல்லது நம்மில் சிலர் ஆதரவு தருவதால்தானே அவையும் விற்பனையாகின்றன? நாம் தயாராகிவிட்டால் நாடு தயாராகிவிடும். தரத்தை அறிய இன்றே தயாராகுங்கள். மறந்து விடாதீர்கள். வளர்ச்சியின் அடையாளம்

கலைமகள் போட்டியாலும், பிற இலக்கிய முயற்சிகளி னாலும் இன்று தமிழ் நாட்டுக்குக் கிடைத்திருக்கும் நல்ல நாவலாசிரியர்களிடமிருந்து நாம் ஊக்கமும் உழைப்பும் உள்ள புது முயற்சிகளை எதிர்பார்க்கிறோம். நம்மையும், நமது மொழியையும் வளர்த்துக் கொள்வது நமக்குப் பெருமை தானே? - - நல்வழி

நீண்ட நாட்களாகச் சிறந்த சிறுகதைகளையே எழுதி வந்த சிறு கதை வித்தகர்களும் இப்போது சில நல்ல நாவல்களை எழுத முற்பட்டிருக்கின்றனர். கல்கிக்குப் பின் தேவன் தொடர் கதைகளை எழுதிப் பெரும் வாசக சமூகத்தை உண்டாக்கிக் கொடுத்திருக்கிறார். சில எழுத்தாளர்கள் தமிழில் சில புதிய நாவல் உத்திகளை அழகாக ஆண்டிருக்கிறார்கள். நல்ல நடையில் நல்ல கருத்துள்ள இலட்சிய நாவல்களை எழுதுவதனால் தமிழுக்குப் பெரிய எதிர்காலத்தை உண்டாக்கித் தர வேண்டுமென்னும் எண்ணம் முற்போக்கு எழுத்தாளர்கள் மொ - 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/99&oldid=621443" இலிருந்து மீள்விக்கப்பட்டது