பக்கம்:மொழியைப் பற்றி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின்

இதே நிலை உருசிய நாட்டிலும் புரட்சிக்கு முன்பும் பின்பும் ஏற்பட்டது. ஆனால் அங்குக் கல்வி, கேள்வி, ஒழுக்கம், பண்பு ஆகிய நிலை களில் மேம்பட்ட மாந்தநல நாட்டமுடைய இலெனின் தோன்றினார். மாந்த இனமேன் மைக்கு மார்க்சு-ஏங்கெல்சு வழி பொது வுடைமைப் புரட்சியை உலகில் உண்டாக்கினார். அதனால் அனைத்து வகையிலும் மனத் துய்மையே செய்வினைத் தூய்மை ஆயிற்று.

'அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை"யின் சால்பினராய்த் துஞ்சாக் கொள்கையராய், அறிந்தோர் புகழும் ஆண்மை யராய்ச், செறிந்த நூல்வழிப் பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி’யுடன் உலகு காப்பவராய் உயர்ந்த இலெனின் மொழிக் காப்பவராயும் இருந்தார்.

புரட்சிப் பாவலன் பூட்கினால் உயிர் பெற்ற உருசிய மொழி, உலக மொழிகளில் சிறப்பிடம் பெறாத ஒன்றாகவே இருந்தது. உலகிலேயே புதுமலர்ச்சியை உண்டாக்கிய அக்டோபர் புரட் சியின் ஆணிவேராக விளங்கிய இலெனின், உருசிய மொழியை உலகின் தலைசிறந்த மொழி களுள் ஒன்றாக முப்பதாண்டு கால உழைப்பால், பேச்சால் எழுத்தால் உயர்த்திவிட்டார். அவரின் மொழி வளர்ச்சி ஆக்கத் திட்டங்கட்கு அவர்தம் தோழர்களும் ஒத்துழைத்தனர்.

விழிப்போரே நிலைகாண்பார் !

விதைப்போரே அறுத்திடுவார் களைகாண் தோறும் அழிப்போரே அறம்செய்வார் !

அறிந்தோரே உயர்ந்திடுவார் என்ற பாவேந்தர் மொழிக் கொப்ப உருசிய மொழியினர்

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/15&oldid=713812" இலிருந்து மீள்விக்கப்பட்டது