பக்கம்:மொழியைப் பற்றி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் 37

'ஏமாற்றவும், மக்களின் பொருள்நிலை சீர்குலையவும் தான்் அப்படிப்பட்ட முயற்சி பயன்தரும் என்பதையும் இலெனின் தெளிவுபடுத்தியிருப்பது, ஒரே மொழியைப் பேசும் மக்கள் வாழாத நாடுகளில், பல்வேறு மொழிபேசும் மக்கள் வாழும் நாட்டிலும் தனிப்பட்ட ஒரு மொழியை மட்டும் ஆட்சிமொழி யாக்கத் துடிப்பது தவறானது; தீதான்து என்பதைத் தெளிவு படுத்தி இருப்பது காணில், இன்று உலகில் வாழும் பல்வேறு மொழிபேசும் மக்களுக்குக் கலங்கரை விளக்காக அமைந் துள்ளது இலெனினின் விளக்கம்.

X தேசியப் பண்பாட்டிற்கு அதிகச் சிறப்புக் கொடுத்து மாக்சிய வாணர்கள் கூக்குரல் எழுப்பி வருகின்றனர். தேசியச் சிக்கல்களை அணுகி அதற்குத் தீர்வுகாண முற்படும்போது, நமது விளக்கம், கொள்கை அடிப்படையில் அமைப்பதற்குத் தேசியப் பண்பாட்டைக் கருத்தில் கொண்டு செயல்படுவத்ே இதற்குச் சிறப்புக் காரணம். ஏழை, இடைநிலை வகுப்பைச் சேர்ந்தவர்களின் போராட்டத்தைத் தனிமைப்படுத்தும் போக்கை உருவாக்குவது சரியில்லை. ஆனால் அதனைத் தான்் தேசியப் பண்பாடு' என்ற கூக்குரல் செய்கிறது. மேலும் இதன் விளைவாக ஒவ்வொரு குடிமகனும், தன்னை ஒரு குறிப்பிட்ட தேசிய இனத்தைச் சேர்ந்தவனாகவே பதிவு செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. இதனால் தேசிய நாடாளு மன்றமும், அமைச்சர்களும், ஒவ்வோர் இனத்தின் மீதும் கட்டாயமாக வரிகளைத் திணிக்கும் உரிமை உண்டாகிறது. இதனால் தேசியச் சிக்கலும், முதலாளியக் கண்ணோட்டமும் மலர்கின்றன. முதலாளியம் ஒழிக்கப்படும் நிலை இல்லை. விளைவுப் பொருள்களின் வாணிபக் கட்டுப்பாடு என்ற பெயரால் பற்பல தவறுகள் சட்டத்தின் துணையுடன் நடைபெறுகின்றன. இவையே தேசியப் பண்பாட்டு உரிமை உண்மையும், திட்டமும் முறை கேடுகளும், வன்முறைகளும் விளைவதற்கு நாட்டில் வழிகோலு கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/39&oldid=713836" இலிருந்து மீள்விக்கப்பட்டது