பக்கம்:மொழியைப் பற்றி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் 49

வரவேற்கிறது. தொழிலாளர் அனைவருக்கும், சோவியத்து என்ற சொல் கவர்ச்சியான சிறந்த சொல்லாகிவிட்டது ' என்று இலெனின் சோவியத்து அரசின் சிறப்பை எடுத்துக் கூறி யிருக்கிறார். சோவியத்து' என்ற சொல்லையே இலெனின்தான்் படைத் தார். அந்தச் சொல் பல எதிர்ப்புகளுக்கிடையே உலகப்புகழ் பெற்றது என்றால், அந்தச் சொல்லை எந்த அளவிற்குப் பொருள் நிரம்பியதாக படைத்திருக்கிறார் என்பது நமக்குப் புலப்படுகிறது. தம் இலட்சியத்திற்கு ஏற்றதாக அந்தச் சொல்லை உருவாக்கி, அதற்குப் பெருமையைத் தேடி, உலகறி சொல்லாக ஆக்கினார். ...

女 முதலாளியம் என்பது ஒரு சமுதாய அமைப்பு. இந்த அமைப்பில் நிலம் - தொழிற்சாலைகள் - கருவிகள் அனைத்தும் ஒரு சிறு கூட்டமே உரிமையாக்கிக் கொள்கிறது - நிலவுடைமை யாளர் - முதலாளிகள்தாம் அதன் பலனை அடைகின்றனர். அதே நேரத்தில் பெருவாரியான நாட்டுமக்கள் எதையும் உரிமை பாராட்ட இயலாத நிலையிலோ அல்லது பொருட் படுத்த முடியாத அளவிற்குச் சிறுசிறு உடைமைகளைப் பெற் றிருக்கவோதான்் முதலாளியம் வழி வகுக்கிறது. மொத்தத்தில் ஒரு சிலரின் வளமான வாழ்விற்காக உழைக்கும் தொழிலாளர் வகுப்பு, தங்களைக் கூலிகளாகவும் அடிமைகளாகவும் ஆக்கிக் கொண்டு வறுமையிலேயே வாழவேண்டி இருக்கிறது. ’’ என்று இலெனின் முதலாளிய'த்திற்கு எளிதில் எவரும் புரிந்துகொள்ளக் கூடிய முறையில் அரிய விளக்கம் தந்திருக் கிறார்.

  • உடைமையை அரசு கைப்பற்றுவது என்றால், உடைமையா ளருக்கு எந்தவித இழப்பீடும் தராமல் கைப்பற்றுவதுதான்் உண்மையான பொருள். ' இழப்பீடு கொடுத்து அரசு உடைமைகளைக் கைப்பற்றுவது மக்களுக்கு எதிரான செயல். நாட்டின் பொருளாதாரத்தை அது வளமாக்காது’’

Guor-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/51&oldid=713848" இலிருந்து மீள்விக்கப்பட்டது