பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

ஒண் என்பது ஒன்று என் பதன் பகுதியாகிய ஒன்குைம். ஒண் என்பது ஒன்றுஎனப் பிறழ உணரப்பட்டுக் கூட்டு வடிவத்தில் ஒன்பது என வழங்கியிருக்க வேண்டும் எனக் குறிப்பிடுவர் பேராசியர் எமனேவ்.”

மலையாளத்தில் ஒம்பது என்ற வழக்குள்ளது. பழைய வடிவம் ஒன்பது என்பதாகும். தமிழ்ப் பேச்சு வழக்கிலும் ஒம்பது என்று வழங்குகிறது. -

கன்னடத்தில் ஒம்பத்து என்ற வழக்கு உள்ளது. அடை யின்கண் ஒம்பை நூறு என வழங்குகிறது.

தெலுங்கில் தொம்பை என்பது தொண்ணுாற்றைக் குறிக்கும்; ஒன்பது நூற்றைக் குறிக்கத் தொம்ம நூறு என்ற சொல் வழங்குகிறது. 10. பத்து

பத்து, பஃது, பது, பன், பான், பதின் என்பன பத்தைக் குறிக்கும் பல்வேறு தமிழ் வடிவங்களாகும்.

பதின் என்பதன் தி கெட்ட வடிவமே பன் என்பது. பதினென்கு, பன்னிரண்டு, பதின்மூன்று என்ற வடிவங்களில் பன்னிரண்டு என்பது மட்டும் பதின் இரண்டு என வழங்காமல் பன்னிரண்டு என வழங்குகிறது. எனைய இரண்டும் பதின் என்ற வடிவமே பெற்றுள்ளன. அதனல், பன் என்பது பதின் என்பதன் திரிபே எனக் கொள்வர்,

பஃது என்பதற்குப் பவ் என்பதே அடிச்சொல்லாகும். அவ்-து-அஃது ஆதலைப் போலப் பவ் +து-பஃது என்றாகி இருக்கலாம்.

பவ்+து என்பது பஃது எனவும், பத்து எனவும் இருவகை வடிவங்கள் பெற்றன.

கல் + தீது-கஃறீது கற்றீது என இருவகை வடிவங்கள் அமைதல் காண்க.

1. D. N. பக். 166